தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
ரோஹித் ஷெட்டி இயக்கத்தில் ஷாரூக் கான், கஜோல் நடிக்கும் தில்வாலே படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு கோவாவில் நிறைவடைந்துள்ளது. ஷாரூக் கான், கஜோல் நடிக்கும் படப்பிடிப்பு, ஜூன் மாதத்தில் துவங்க உள்ள நிலையில், வருண் தவான், கிர்தி சனோன் நடித்த முதற்கட்ட படப்பிடிப்பு நிறைவுற்றுள்ளது. இதுகுறித்து, வருண் தவான் டுவிட்டரில் குறிப்பிட்டுள்ளதாவது, படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு, கோவாவில் நிறைவடைந்துள்ளது. இயக்குநர் ரோஹித் ஷெட்டி மற்றும் படக்குழுவினருக்கு எனது நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். அதேபோல், கிரிதி சனோனும், முதற்கட்ட படப்பிடிப்பு சிறப்பாக நடைபெற்றதாக டுவிட்டரில் குறிப்பிட்டுள்ளார். கோவாவில் நடைபெற்ற முதற்கட்ட படப்பிடிப்பில், பட யூனிட் உடன், ஷாரூக் கான் கலந்துகொண்டார்.