ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
'ஓ காதல் கண்மணி' படத்தில் தனது நடிப்பின் மூலமாக திரைப்பட ரசிகர்களின் மனதை நித்யா மேனன் கொள்ளை கொண்டு விட்டார். இதற்கு முன் பல தமிழ்ப் படங்களில் நடித்திருந்தாலும் ஒரு படம் கூட நித்யாவுக்கு வெற்றிப் பட வரிசையில் சேரவில்லை. ஆனால், முதல் முறையாக ஒரே நாளில் தமிழில் அவர் நடித்து வெளிவந்த இரண்டு படங்களான 'ஓ காதல் கண்மணி, காஞ்சனா 2' ஆகிய படங்களின் மூலம் 'டபுள் வெற்றி'யைப் பெற்று விட்டார். இரண்டு படங்களுமே இரண்டு நாட்களாக வசூல் குறையாமல் வெற்றிப் பட வரிசையில் இடம் பெற்று விட்டது.
தமிழில் முதன் முதலாக மணிரத்னத்தின் நெருங்கிய நண்பரான ஜெயேந்திரா இயக்கிய '180' படத்தில்தான் நித்யா மேனன் கதாநாயகியாக அறிமுகமானார். ஆனால், அதற்கு முன்பாகவே தெலுங்கு, கன்னடம், மலையாளப் படங்களில் நடித்து விட்டார். '180' படம் வெளிவந்து வெற்றி பெறாமலே போய்விட்டது. அதைத் தொடர்ந்து நித்யா மேனன் நடித்த, “வெப்பம், மாலினி 22 பாளையம் கோட்டை,” ஆகிய படங்களும் தோல்விப் படங்களாகவே அமைந்தது. அவர் நாயகியாக நடித்த சேரன் இயக்கிய 'ஜேகே எனும் நண்பனின் வாழ்க்கை' படமும் டிவிடி வடிவில்தான் வெளியானது.