'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
ஒரே படத்தில் இரண்டு ஹீரோயினிகள் என்றாலே அங்கே அக்கப்போர்தான் நடக்கும். ஆனால் விஜய்யின் புலி படத்தில் ஸ்ருதிஹாசன், ஹன்சிகா என இருவரும் இருந்தபோதும் எந்தவித சலசலப்பும் இன்றி சத்தமில்லாமல் படப்பிடிப்பு நடந்து கொண்டிருக்கிறது. மேலும், ஸ்ருதிஹாசன்-ஹன்சிகா சம்பந்தப்பட்ட காம்பினேசன் காட்சிகள் குறைவுதான் என்றாலும், அவர்கள் இருவரும் ஸ்பாட்டுக்கு வந்தபோது ஒருவரையொருவர் கட்டித்தழுவிக்கொண்டார்களாம். அதோடு தனிமையில்அமர்ந்து தங்களது சினிமா கேரியர் பற்றி மணிக்கணக்கில் மனம் விட்டு பேசினார்களாம்.