'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
சிவகார்த்திகேயனுடன் நடித்த காக்கி சட்டை படத்திற்கு பிறகு சுமார் 10 படங்கள் வரை நடித்து வருகிறார் இமான் அண்ணாச்சி. இதில் புலி படம் முக்கியத்துவம் வாய்ந்தது. இந்த படத்தில் சந்தானம், சூரி போன்ற மெகா காமெடியன்கள் யாரும் இல்லாததால் இமான் அண்ணாச்சி, தம்பி ராமைய்யா ஆகியோரை முன்னிறுத்திதான் காமெடி காட்சிகள் உருவாக்கப்பட்டிருக்கிறது. அதனால், புலி தன்னை இன்னும் பெரிய இடத்துக்கு கொண்டு செல்லும் என்று எதிர்பார்க்கும் இமான் அண்ணாச்சி, மின்னல் மோகினி என்றொரு படத்திலும் கிட்டத்தட்ட ஹீரோவுக்கு இணையான வேடத்தில் நடித்துக்கொண்டிருக்கிறார். அதாவது, நடிகை குஷ்பூவின் தம்பி அப்துல்லாதான் இந்த படத்தில் ஹீரோவாக நடிக்கிறார். இமான் அண்ணாச்சி துணி வியாபாரம் செய்பவராக வருகிறார். அவர்கள் இருவரும் நண்பர்கள்.