மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' | மகள் திருமணத்தில் பிசியான ஷங்கர் | மீண்டும் வெளியாகிறது 'அஞ்சான்' | விடுதலைபுலி இயக்கத்தின் அடுத்தகட்ட தலைவர்கள் பற்றிய படம் | பிளாஷ்பேக்: நம்பியாருக்கு பொருத்தமான ஜோடியாக வலம் வந்த டி.கே.சரஸ்வதி |
ரோமியோ ஜூலியட் படத்தில் டண் டணக்கா... ணக்கா... ணக்கா என்று துவங்கும் பாடல் சம்பந்தமாக அதன் இசையமைப்பாளர் டி.இமான், பாடகர் அனிரூத் (பிரபல இசையமைப்பாளர்), பாடலாசிரியர் ரோகேஷ் (அனேகனில் டங்கா மாரி ஊதாரி... பாடலை எழுதியவர்), தயாரிப்பாளர் நந்தகோபால் ஆகிய நான்கு பேருக்கும் ரூ. 1 கோடி நஷ்டஈடு கேட்டு பிரபல டைரக்டரும், நடிகருமான டி.ராஜேந்தர், வக்கீல் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.டண்டணக்கா... ணக்கா... ணக்கா - என்று துவங்கும் பாடலை ரோகேஷ் எழுதி இருக்கிறார். அனிரூத் பாடியிருக்கிறார்.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, டி.ராஜேந்தர் வக்கீல் அனுப்பியுள்ள நோட்டீசில், இந்த படத்தில் இடம்பெறும் டண் டணக்கா... ணக்கா... ணக்கா என்ற பாடலை எனது கட்சிக்காரரிடமிருந்து முறையான அனுமதி இல்லாமலும் அவர் பேசும் வசனத்தை, பின்னணியில் ஒலிக்க செய்திக்கிறார்கள். இதன் மூலம் என் கட்சிக்காரரின் பெயரை துஷ்பிரயோகம் செய்திருக்கிறார்கள். இதே பாட்டும், பதிவு செய்யப்படும் காட்சிகளும் யூ ட்யூப் தளத்திலும், சாட்டிலைட் சானலிலும் வெளியிடப்பட்டுள்ளது. இதற்காக எனது கட்சிக்காரருக்கு ரூ.1 கோடிநஷ்ட ஈடு தரவேண்டும். மேலும் யூ ட்யூப். தனியார் சாட்டிலைட் சானல் உள்பட எந்த ஒரு ஊடகத்திலும் எந்த ஒருதளத்திலும் வெளியிடுவதை உடனே நிறுத்த வேண்டும். அதோடு வழக்கு செலவினங்களுக்காக ரூ.1000 தரவேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.