ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
பிரபல கவர்ச்சி நடிகை சோனா, தனது யுனிக் புரொடக்ஷன் சார்பில் படம் தயாரிக்க விரும்பினார். அந்த படத்தை இயக்க வெங்கட்பிரபுவுக்கு ஒண்ணரை கோடி அட்வான்சாக கொடுத்திருந்தார். ஆனால் படம் இயக்கிக் கொடுக்காத வெங்கட்பிரபு தனது உதவியாளரை வைத்து கனிமொழி என்ற படத்தை இயக்கி கொடுத்தார். அந்த படம் தோல்வி அடைந்தது. இதைத் தொடர்ந்து வெங்கட்பிரபுவிடம் கொடுத்த அட்வான்ஸ் தொகையான ஒண்ணரை கோடியை திருப்பி கேட்டு நடிகர் சங்கம், தயாரிப்பாளர் சங்கத்தில் சோனா புகார் செய்தார். இது தொடர்பாக கடந்த சில நாட்களாக தயாரிப்பாளர் சங்கத்தில் பேச்சு வார்த்தை நடந்தது. பேச்சுவார்த்தையின் முடிவில் வருகிற மே மாதத்திற்குள் வெங்கட்பிரபு சோனாவுக்கு ஒரு கோடியை திருப்பிக் கொடுக்க தயாரிப்பாளர் சங்கம் உத்தரவிட்டது.