Advertisement

சிறப்புச்செய்திகள்

ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

அப்பு கமல் போன்று புலியில் 3 அடி உயர விஜய்!

18 ஏப், 2015 - 09:50 IST
எழுத்தின் அளவு:
Dwarf-getup-for-Vijay-in-Puli-movie

சமீபகாலமாக ரசிகர்கள் வித்தியாசமான படங்களுக்கே வரவேற்பு கொடுத்து வருவதால், ஹீரோக்கள் படத்துக்குப்படம் ஏதேனும் வித்தியாசமான கெட்டப்புகளில் நடித்தாக வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார்கள். அதனால் அனேகன் படத்தில் நான்கு விதமான கெட்டப்புகளில் தோன்றினார் தனுஷ். இதேபோல் மற்ற ஹீரோக்களும் வித்தியாசமான தேடல்களில்தான் ஈடுபட்டு வருகிறார்கள்.


அந்த வகையில், இதற்கு முன்பு இரண்டுவிதமான வேடங்களில் நடித்தும் பெரிய வித்தியாசம் எதுவும் இல்லாமல்தான் நடித்திருந்தார் விஜய். ஆனபோதும், ஏதாவது வித்தியாசமான கெட்டப்புகளில் நடிக்க வேண்டும் என்ற ஆர்வத்தில் அவர் இருந்தபோதுதான் புலி படத்தின் கதையை விஜய்யிடம் சொன்னார் சிம்புதேவன்.


சரித்திரை பின்னணி கொண்ட இந்த படத்தில் விஜய் இளவரசன் கெட்டப்பில் நடித்து வந்த காட்சிகள் இதுவரை படமாக்கப்பட்டு வந்தது. சென்னையில் ஈசிஆர் சாலையில் அரண்மனை செட்டில் 2 மாதங்களாக நடைபெற்று வந்த படப்பிடிப்பு பின்னர் கேரளாவுக்கு சென்று விட்டு அதையடுத்து தலக்கோணத்தில் 2 கோடி பட்ஜெட்டில் உருவாக்கப்பட்ட அரசர் காலத்து கெஸ்ட் ஹவுஸ் செட்டில் ஒரு மாதமாக படமாக்கி வருகின்றனர்.


இந்த நிலையில், தற்போது விஜய் அபூர்வ சகோதரர்கள் படத்தில் அப்பு கெட்டப்பில் குள்ள மனிதனாக கமல் நடித்தது போன்ற ஒரு கெட்டப்பில் தற்போது நடித்துக்கொண்டிருக்கிறார். கிட்டத்தட்ட 3 அடி உயரமுள்ள மனிதனாக அவர் நடிக்கும் அந்த காட்சிகள் அதிநவீன கேமராக்களை வைத்து படமாக்கப்படுகிறது. அந்த கெட்டப்பில் நடிக்கும் விஜய்க்கு பாடல்கூட உள்ளதாம்.


ஆனால், இந்த காட்சிகளை மிக ரகசியமாக படமாக்கி வருகிறார்கள். அதோடு, இந்த கெட்டப் ரகசியத்தை வெளியில் சொல்லக்கூடாது என்றும் புலி யூனிட்டில் உள்ளவர்களுக்கு அதிரடி கண்டிசன் போடப்பட்டிருக்கிறது.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in