ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
பிரபல வேங்கடதிரி எக்ஸ்பிரஸ் படம் மூலம் அறிமுகமான அழகு தேவதையான ராகுல் ப்ரீத் சிங், பிரபல ஹீரோவான கோபி சந்தத்துடன், லௌகியம் படத்தில் நடித்ததன் மூலம் முன்னணி இடத்திற்கு வந்து விட்டார். அவர் தற்போது டோலிவுட்டையே தன் கைவசம் வைத்திருப்பது போன்ற ஒரு நிலை ஏற்பட்டுள்ளது என்று கூறினால் மிகையாகாது. அவர் தற்போது டோலிவுட்டின் பிஸியான நடிகை என்ற பெயரை பெற்று இருக்கிறார். ஆனால் அவர் தற்போது ஒரு மிகப்பெரிய வாய்ப்பை இழந்து இருக்கிறார். அதாவது அவர் பிரின்ஸ் மகேஷ் பாபுவின் பிரம்மோத்சவம் படத்தில் நடிக்கும் வாய்ப்பை இழந்துள்ளார். பிரபல இயக்குனர் ஸ்ரீகாந்த்
அட்டாலா இயக்கும் பிரம்மோற்சவத்தில், மகேஷ் பாபுவுக்கு மூன்று நாயகிகள். அதில் முக்கிய கதாபாத்திரத்திற்காக ராகுல் ப்ரீத் சிங் முதலில் ஒப்பந்தமாகி உள்ளார். பின்னர் அவர் பிரபல ஹீரோக்களான ஜூனியர் என் டி ஆர் மற்றும் ராம் சரண் படங்களில் நடித்து வருவதால் அவரால் இந்த படத்திற்கு தேதி ஒதுக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. அதனால் அவர் நடிக்க இருந்த கதாபாத்திரத்தில் தற்போது பிரபல நடிகையான சமந்தா நடிக்கிறார். இது ராகுலுக்கு பேட் டயம் என்று தான் கூறவேண்டும்.