ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! | 'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் |
லிங்கா படத்தின் ரிலீஸ் தேதியில் ஏற்பட்ட குழப்பம் காரணமாக பல படங்களின் ரிலீஸ் தேதிகள் மாற்றப்பட்டன. உத்தமவில்லன் ரிலீஸ் தேதியில் நிலவும் குழப்பம் காரணமாக அதேபோன்ற நிலை தற்போது ஏற்பட்டுள்ளது. வெங்கட்பிரபு இயக்கத்தில் சூர்யா நடித்திருக்கும் மாஸ் படம் மே 1 அன்று ரிலீஸ் என்று சொல்லப்பட்டது.
யுடிவி தயாரிப்பில், எஸ்.பி.ஜனநாதன் இயக்கத்தில் விஜய்சேதுபதி, ஆர்யா, ஷாம் ஆகியோர் நடித்திருக்கும் புறம்போக்கு என்கிற பொதுவுடைமை படமும் வரும் மே 1 ஆம் தேதி ரிலீஸ் ஆவதாக அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் உத்தமவில்லன் படம் மே 1 ஆம் தேதி வெளியாவதாக அறிவிக்கப்பட்டதும் நிலைமை மாறியது.
இப்போது மாஸ், புறம்போக்கு இரண்டு படங்களுமே ரிலீஸ் தேதியை மே 15ஆம் தேதிக்கு தள்ளி வைத்துவிட்டன. இரண்டுமே அதிக எண்ணிக்கையிலான தியேட்டர்களில் ரிலீஸ் ஆகும் படங்கள் என்பதால் இரண்டில் ஒரு படம் மேலும் தள்ளிப்போகும் என்று சொல்லப்படுகிறது.