ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
'என்னை அறிந்தால்' படத்திற்குப் பிறகு அஜித், 'சிறுத்தை' சிவா இயக்கத்தில் நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு ஏப்ரல் 20ம் தேதி முதல் ஆரம்பமாக உள்ளதாம். இந்தப் படத்தில் அஜித் ஜோடியாக ஸ்ருதிஹாசன் முதன் முறையாக நடிக்கிறார். கடந்த வாரம்தான் இப்படத்தின் பூஜை எளிமையான முறையில் நடைபெற்றது. வழக்கம் போல அஜித் பூஜையில் கலந்து கொள்ளவில்லை. தன் படம் சம்பந்தப்பட்ட எந்த நிகழ்ச்சிகளிலும் அஜித் இன்னும் கலந்து கொள்ளாமல் இருப்பது அவருடைய ரசிகர்களுக்கு ஆச்சரியமாகவே உள்ளது. படங்களில் பார்ப்பதைத் தவிர அஜித்தை வேறு எந்த ஒரு நிகழ்விலும் பார்க்க முடியாத வருத்தத்தில் அவர்கள் இருக்கிறார்கள்.
'வீரம்' படத்திற்குப் பிறகு சிவா - அஜித் கூட்டணி மீண்டும் இணையும் இந்தப் புதிய படத்திற்கு வழக்கம் போலவே தலைப்பு வைக்காமல் இருக்கிறார்கள். 'தல 56' என்றுதான் அந்தப் படத்தை அஜித் ரசிகர்களும் குறிப்பிட்டு வருகிறார்கள். “ஆரம்பம், வீரம், என்னை அறிந்தால்'' ஆகிய படங்களின் தலைப்புகளும் அந்தப் படங்களின் படப்பிடிப்பு ஆரம்பமான பிறகுதான் அறிவிக்கப்பட்டது. அதே போல்தான் இந்தப் படத்திற்கும் தலைப்பு அறிவிக்கப்படலாம் என்கிறார்கள்.