ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
ராகவா லாரன்ஸ் இயக்கி நாயகனாக நடித்துள்ள 'காஞ்சனா 2' படம் இன்று வெளியாகிறது. சமீப காலமாக பேய்ப் படங்கள் வசூல் ரீதியாகவும் பெரிய வெற்றியைப் பெற்று வருகின்றன. இப்படிப்பட்ட ஒரு வெற்றியை பேய்ப் படங்களில் ஆரம்பித்து வைத்த பெருமை ராகவா லாரன்சையே சாரும். 2011ம் ஆண்டு அவர் இயக்கி வெளிவந்த 'காஞ்சனா' படம் தமிழில் மிகப் பெரும் வசூல் சாதனையை செய்தது. அதன் பின்தான் தமிழ்த் திரையுலகில் மீண்டும் பேய் சீசன் படங்கள் அதிகமாக வர ஆரம்பித்தது.
இன்று வெளியாக உள்ள 'காஞ்சனா 2' படம் தமிழ், தெலுங்கு என இரு மொழிகளிலும் உலகம் முழுவதிலும் சுமார் 1000 திரையரங்குகளில் வெளியாகிறதாம். தெலுங்கில் 'கங்கா' என்ற பெயரில் இப்படம் வெளியாகிறது. ராகவா லாரன்ஸுக்குத் தெலுங்கிலும் நல்ல வரவேற்பு இருப்பதால் அங்கும் இந்தப் படம் நல்ல வியாபாரத்தை ஏற்படுத்தித் தந்துள்ளது. இருந்தாலும் சில பிரச்சனைகளால் 'கங்கா' தெலுங்கில் இன்று வெளியாகுமா என்ற சந்தேகமும் எழுந்துள்ளது.
பேய்ப் படம் என்றாலும் பக்திக்கு முக்கியத்துவம் கொடுத்து இருப்பதால் பெண்களும் இந்தப் படத்தை அதிகம் வந்து பார்ப்பார்கள் என்று தியேட்டர்காரர்கள் எதிர்பார்க்கிறார்கள். இந்தப் படத்தின் முடிவில் ராகவா லாரன்ஸ் அடுத்த பாகமாக 'காஞ்சனா 3' ஐ உருவாக்கும் விதத்தில்தான் படத்தை முடித்திருக்கிறாராம். 'முனி' படத்தின் மூலம் இந்தப் பேய் பட சீரிஸை எடுக்க ஆரம்பித்த ராகவா லாரன்ஸ் 'முனி, காஞ்சனா, காஞ்சனா 2', அடுத்து 'காஞ்சனா 3' என எடுக்க உள்ளது தமிழ்த் திரையுலகில் முதல் முறையாக உருவாகும் நான்காவது பாக படமாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.