Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

ரிலீசுக்கு முன்பே லாபம் சம்பாதித்த காக்கா முட்டை, விசாரணை: தனுஷ் தகவல்

17 ஏப், 2015 - 12:01 IST
எழுத்தின் அளவு:
Kakka-Muttai---Visaranai-got-profit-before-movie-sale-says-Dhanush

கடந்த சில ஆண்டுகளாகவே சிறு பட்ஜெட் படங்கள்தான் லாபம் சம்பாதிக்கிறது. குறைந்த முதலீடு, குறைந்த லாபம் அடிப்படையில் அவைகள் வெளிவருகிறது. இந்த நிலையில் பல விருதுகளை குவித்து வரும் காக்கா முட்டை படமும், வெற்றிமாறன் இயக்கியுள்ள விசாரணை படமும் நல்ல லாபத்தை சம்பாதித்துள்ளது. இதனை தயாரிப்பாளர்களில் ஒருவரான தனுஷே தெரிவித்தார்.


காக்கா முட்டை டிரைலர் வெளியீட்டு விழாவில் பேசிய தனுஷ் "காக்கா முட்டை படத்தின் கதையை கேட்டபோது சின்ன வயதில் நானும், என் அண்ணன் செல்வராகவனும் வாழ்ந்த வாழ்க்கை நினைவுக்கு வந்தது. எங்கள் வாழ்க்கையில் நடந்த சம்பவங்களும் அதில் இருந்தது எனக்கு ஆச்சர்யத்தை கொடுத்தது. அதனாலேயே இந்தப் படத்தை தயாரிக்க முன்வந்தேன். இந்தப் படத்தில் நடித்திருக்கும் சிறுவர்கள் ஆச்சர்யப்படும் விதத்தில் தங்கள் திறமையை வெளிப்படுத்தியிருக்கிறார்கள். காக்கா முட்டை படமும், விசாரணை படமும் வெளிவருதற்கு முன்பே எனக்கு லாபத்தை ஈட்டிக் கொடுத்திருக்கிறது" என்றார் தனுஷ்.


படத்தின் டிரைலரை வெற்றி மாறன் வெளியிட இயக்குனர் மணிகண்டன் மற்றும் படத்தில் நடித்த சிறுவர்கள் பெற்றுக் கொண்டார்கள். நடிகை ஐஸ்வர்யரா ராஜேஷ் உள்ளிட்ட காக்கா முட்டை படத்தில் நடித்த அத்தனை சிறுவர்களும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.


Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in