‛கில்லி' ரீ-ரிலீஸ் : த்ரிஷா நெகிழ்ச்சி | சந்தானத்தின் இங்க நான் தான் கிங்கு படம் மே 10 ல் ரிலீஸ் | பைக் டாக்சி ஓட்டுனராக நடிக்கும் நக்ஷா சரண் | எழுத்தாளராக நடிக்கும் வெற்றி | ஈரோடு மகேஷ் இல்லையென்றால் சினிமாவில் நான் இல்லை : தமன்குமார் நெகிழ்ச்சி | அரசியல்வாதிகள் நல்லது செய்தால் நடிகர்கள் அரசியலுக்கு வரமாட்டார்கள் : விஷால் | பிளாஷ்பேக்: நடிகையை திருமணம் செய்த முதல் இயக்குனர் | அன்பே வா சீரியல் நடிகருக்கு திருமணம் | எதிர்நீச்சல் நடிகையின் ஜாலி டூர் கிளிக்ஸ் | நடன பள்ளி தொடங்கிய காயத்ரி - யுவராஜ் |
திலகர் படத்தில் கிஷோரின் மனைவியாக கிராமத்து கதாபாத்திரத்தில் நம் மண்ணின் உணர்வுகளை உள்வாங்கி பிரதிபலித்த அனுமோல், மலையாள நடிகை என்றால் நம்ப சிரமமாகத்தான் இருக்கும். அந்த அளவுக்கு கொடுத்த கேரக்டரை சிறப்பாக செய்து முடிப்பவர் என்பதால் தான் எடிட்டர் விஜய் ஆண்டனி, தமிழில் தற்போது தான் இயக்கிவரும் படத்தின் கதாநாயகியாக இவரை ஒப்பந்தம் செய்தார். கடந்த 2012ல் மலையாளத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்திய சூப்பர்ஹிட் படமான 'ஷட்டர்' தான் தற்போது விஜய் ஆண்டனி இயக்கத்தில் தமிழில் ரீமேக்காகி வருகிறது.
இந்தப்படத்தில் விலைமாது கேரக்டரில் நடிக்கிறார் அனுமோல். மலையாளத்தில் இதே விலைமாது கேரக்டரில் சஜிதா மாடத்தில் என்கிற துணை நடிகை சிறப்பாக நடித்திருந்தார். பெண்கள் ஜீன்ஸ் அணிவது குறித்து ஜேசுதாஸ் தெரிவித்த கருத்திற்கு அவரை கிண்டலடிக்கும் விதமாக எதிர்கருத்து கூறி பரபரப்பை ஏற்படுத்தினாரே ஒரு நடிகை, அவரே தான் இவர். அடிப்படையில் சஜிதா தியேட்டர் ஆர்ட்டிஸ்ட்டும் கூட.. நடிப்பிற்காக கேரளா அரசு விருது பெற்றவர். அவர் அளவுக்கு அந்த கேரக்டரை என்னால் நடிக்க முடியுமா என்றும் தோன்றவில்லை என்கிறார் அனுமோல் தன்னடக்கத்துடன்..