'மார்க் ஆண்டனி' வெற்றியைத் தக்க வைப்பாரா 'ரத்னம்'? | 'விக்ரம், லியோ, கூலி' - டைட்டில் டீசர் வீடியோ, எது பெஸ்ட்? | 10 வருடங்களுக்கு பிறகு ஜூனியர் என்டிஆர் பட இயக்குனர் - ஒளிப்பதிவாளர் பரஸ்பரம் குற்றச்சாட்டு | ஜன கன மன 2 எப்போது? - இயக்குனர் தகவல் | ஆவேசம் படத்துக்கு சமந்தா பாராட்டு | சிறிய படங்களை நசுக்குகிறதா ரீ-ரிலீஸ் படங்கள்? | சைக்கிளில் சென்று ஓட்டு போட்டது ஏன் : விஷால் | அயோத்தியில் இடம் வாங்கிய அமிதாப்பச்சன் | இயக்குனர் 'பசி' துரை மறைவு | சினிமாவில் வளர திறமை மட்டுமே போதாது : பரிணிதி சோப்ரா |
நடிகர் அனில் கபூரின் வாரிசு, சோனம் கபூர். பாலிவுட்டின் இளம் நடிகையான இவர், சமீபத்தில் பேஷன் மேகசின் ஒன்றுக்கு, துணிச்சலாக படு கவர்ச்சியாக போஸ் கொடுத்தார். இந்தப்படம் இணையதளங்களில் காட்டுத்தீயாய் பரவியது. சோனம் கபூரின் இந்த கவர்ச்சி புகைப்படத்தால் இயக்குநர் சூரஜ் பர்ஜாத்யா அப்செட்டாகியுள்ளார்.
சோனம் கபூர், கவர்ச்சி போஸ் கொடுத்தால் இவருக்கு என்ன வருத்தம்.?
ஹம்ஆப்கி ஹேயின் கவுன், ஹம் சாத் சாத் ஹேயின் போன்ற குடும்பபாங்கான படங்களை இயக்கிய சூரத், இப்போது பிரேம் ரத்தன் தன் பயோ என்ற படத்தை இயக்கி வருகிறார். இதில் சல்மான் கான், சோனம் கபூர் நடித்து வருகின்றனர். தனக்கு என்று சினிமாவில் ஒரு இமேஜ் இருக்கிறது. தனது படத்திற்கு என்று ஒரு ரசிகர் கூட்டம் உள்ளது. அப்படியிருக்கையில் தன் படத்தில் நடித்து வரும் சோனம் கபூர் இப்படியொரு கவர்ச்சி போஸ் கொடுத்திருப்பது தன் படத்திற்கு ஏதேனும் பாதிப்பை ஏற்படுத்துமோ என்று கலக்கத்தில் இருக்கிறார். இதனால் சோனம் கபூர் மீதும் சூரஜ் வருத்தத்தில் இருக்கிறார்.