டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |
பாலிவுட்டின் இன்றைய இளம் நட்சத்திரங்கள் நடிப்பை தாண்டி, பாட்டு பாடுவதிலும் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர். இதில் மாஜி ஹீரோயின் தபுவும் இணைந்துள்ளார். ஏற்கனவே ஹைடர் படத்தில் ஸ்ரத்தா கபூருடன் இணைந்து ஒரு பாடல் பாடியுள்ள தபு, இப்போது த்ரிஷ்யம் இந்தி ரீ-மேக்கிலும் ஒரு அழகான பாடலை பாடியிருக்கிறார். அஜய் தேவ்கான், ஸ்ரேயா சரண் நடிக்கும் இப்படத்தில் தபு போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார். இப்படத்தில் இடம்பெறும் பாடல் ஒன்றில் யாரை பாட வைக்கலாம் என இயக்குநர், இசையமைப்பாளர் யோசித்த போது நிறையபேர் தபு பாட வைக்கலாம் என்று கூறியுள்ளனர். அதன்படி தபு அழைத்து பேசிய போது அவரும் சம்மதம் சொல்ல இப்போது பாடலும் பதிவாகியுள்ளது.
மலையாளத்தில் வசூலில் பெரும் சாதனை படைத்த படம் த்ரிஷ்யம். மோகன்லால், மீனா நடித்த இப்படம் தமிழ், தெலுங்கு, கன்னடம் மொழிகளில் ரீ-மேக்காகியுள்ளது. இப்போது இந்தியிலும் ரீ-மேக்காகி வருகிறது. நிஷிகாந்த் காமத் இயக்குகிறார்.