ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
தமிழ் சினிமாவில் தான் டைட்டில் வைப்பதற்காக தமிழ் வார்த்தைகளைத்தேடி மெனக்கெட வேண்டும்.. ஒரு வார்த்தையிலோ அல்லது ஒரு வரியிலோ டைட்டில் வைத்து கவனம் ஈர்க்க, பலர் தமிழ் அகராதியை புரட்டுகிறார்கள்.. சிலர் ஹிட்டான பாடல் வரிகளை புரட்டுகிறார்கள். மலையாள சினிமாவை பொறுத்தவரை அந்த கவலையே இல்லை. ஒரு வருடத்தில் அங்கே வெளியாகும் படங்களில், மலையாளத்தை விட, ஆங்கில டைட்டில் கொண்ட படங்கள் தான் அதிகம் ரிலீசாகின்றன. காரணம் அங்கே ஆங்கில டைட்டிலுக்கு தடையில்லை.
அதனாலேயே இயக்குனர் சித்திக்கும் டைட்டிலுக்காக மெனக்கெடுவதில்லை.. கதையை எழுதிவிட்டு அதற்கு பொருத்தமான ஆங்கில வார்த்தையை டைட்டிலாக்கி விடுவார். ஏதோ ஒன்றிரண்டு படம் என்றால் பரவாயில்லை.. கடந்த 2௦ வருடமாக தமிழ் தவிர்த்து இவர் இயக்கும் படங்களின் பெயர்களை கவனித்தீர்களா..? வியட்நாம் காலனி', 'ஹிட்லர்', 'பிரண்ட்ஸ்', 'குரோனிக் பேச்சிலர்', 'பாடிகார்டு', 'லேடீஸ் அன்ட் ஜென்டில்மென்' என எல்லாமே ஆங்கிலம் தான்.
இதோ இப்போது வெளியாகியுள்ள 'பாஸ்கர் தி ராஸ்கல்' படம் வரை ஆங்கில டைட்டில் தான். தனது படங்களின் வெற்றிக்கு ஆங்கிலத்தில் டைட்டில் வைப்பதையும் ஒரு சென்டிமென்ட்டாகத்தான் பார்க்கிறார் சித்திக். தற்போது வெளியாகி வெற்றிகரமாக ஓடும் 'பாஸ்கர் தி ராஸ்கல்' படத்தின் வெற்றியும் அதைத்தான் உறுதிப்படுத்துகிறது.