ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
உன்னாலே உன்னாலே படத்திற்கு பிறகு தமிழில் சரியான படங்கள் கிடைக்காததால் மலையாளம், தெலுங்கு, கன்னடம், இந்தி என பரவலாக நடிக்கச்சென்று விட்டார் சதா. கதாநாயகியாக இல்லையென்றாலும் கேரக்டர் வேடங்களில் நடித்து வந்த அவரை, புலிவேஷம் படத்திற்காக அழைத்து வந்து ரீ-என்ட்ரி கொடுத்தார் டைரக்டர் பி.வாசு.
அதன்பிறகு, நான் அவள் அது, மத கஜ ராஜா படங்களிலும் நடித்தார். இந்த நிலையில், தற்போது வடிவேலுவுடன் எலி படத்தில் நடித்துள்ளார் சதா. இந்த படத்தில் அவர் ஒரு கிளப் டான்சராக நடித்திருக்கிறார். அதனால் இதுவரையில்லாத அளவுக்கு கவர்ச்சி விருந்து படைத்துள்ளார் சதா.
மேலும், இந்த படத்துக்காக தனது உடல் எடையை கணிசமான அளவு குறைத்துள்ள சதாவின் எலி பட புகைப்படங்கள் வெளியாகியிருப்பதைத் தொடர்ந்து தற்போது மேலும் சில டைரக்டர்களும் அவரிடம் புதிய படங்களுக்கான பேச்சுவார்த்தையில் இறங்கியுள்ளனர். அதனால், அடுத்து சதாவின் கவர்ச்சி ரவுண்டு பிரகாசமாக இருக்கும் என்று தெரிகிறது.