டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |
யங் ரிபல் ஸ்டார் பிரபாசின் ரசிகர்களுக்கு இந்த செய்தி நிச்சயம் ஏமாற்றத்தை அளிக்கும். அனைவரும் மிகவும் எதிர்பார்த்து காத்து இருக்கும் படம் பாகுபலியாகும். தற்போது இந்த படத்தின் ரிலீஸ் தேதி தள்ளி போகின்றது. இந்த படம் வரும் மே 15ம் தேதி வெளியாகும் என்று கூறப்பட்டது. ஆனால் இந்த படத்தின் வி எப் எக்ஸ் வேலைகள் இன்னும் முடியவில்லை. அதாவது இந்த படத்தில் விஷுவல் எபெக்ட்ஸ் வேலைகள் சிறப்பாக வரவேண்டும் என்பதற்காக படக்குழுவினர் ரொம்பவே மெனக்கட்டு வருகிறார்களாம். அதனால் தான் அறிவிக்கப்பட்ட தேதியில் படத்தை ரிலீஸ் செய்ய முடியாத நிலை ஏற்பட்டு இருப்பதாக தெரிகிறது. எனினும் இது சம்பந்தமாக அதிகாரப்பூர்வ தகவல் எதுவும் வரவில்லை. பிரபல இயக்குனர் ராஜமௌலி இயக்கும் இந்த படத்தில் ரானா, அனுஷ்கா,தமன்னா போன்ற பிரபலங்களும் நடிக்கின்றனர். ஆர்கா மீடியா நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு பிரபல இசை அமைப்பாளர் எம் எம் கீரவாணி இசை அமைக்கிறார். இந்த படம் அனேகமாக ஜூன் மாதத்தில் ரிலீஸ் ஆகும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.