'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
முன்பெல்லாம் சித்திரை விஷு கொண்டாட்டமாக (வருடப்பிறப்பு) கேரளாவில் ஸ்டார் ஹீரோக்களின் படங்கள் வெளியாவதற்கு வரிசைகட்டி நிற்கும். அதற்கேற்ற மாதிரி அனைத்து முன்னணி நடிகர்களும் தங்களது படம் அன்றைய தினம் வெளியாவதை ஒரு கௌரவமாகவே கருதினார்கள். ஆனால் இன்றோ நிலைமை அப்படியே தலைகீழாக மாறிவிட்டது. இன்று மலையாளத்தில் மம்முட்டி நடித்த 'பாஸ்கர் தி ராஸ்கல்' என்கிற ஒரு படம் மட்டுமே வெளியாகியுள்ளது..
கேரளாவில் ஸ்டார் படங்கள் வெளியாகும் அதே நாளில் சென்னையிலும் வெளியாவதுதான் வழக்கமாக நடக்கும். ஆனால் மம்முட்டி படம் இரண்டு நாள் கழித்து (ஏப்-17) தான் சென்னைக்கே வருகிறது.. காரணம் இங்கே தமிழ்நாட்டில் கட்டாயமாக பின்பற்றப்படும் வெள்ளிக்கிழமை ரிலீஸ் நடைமுறை தான். கேரளாவில் அந்த கணக்கெல்லாம் இல்லை. அதனால் தான் போன வாரம் கூட எந்தப்படமும் வெளியாகவில்லை.. அதற்கு முதல் வாரம் கூட வெள்ளிக்கிழமை அல்லாது சனியன்றுதான் (ஏப்-4) திலீப் நடித்த 'இவன் மரியாதராமன்' படம் வெளியானது. அதுவும் ஓடிக்கழித்து 12 நாள் ஆகிவிட்டதால், இந்தவாரம் மம்முட்டி மட்டும் தான் தனிக்காட்டு ராஜாவாக வலம் வரப்போகிறார்.