ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
கடந்த 1989ஆம் ஆண்டு வெளிவந்த மெகா ஹிட் படமான சிவாவை அவ்வளவு எளிதாக யாராலும் மறக்க முடியாது. பிரபல இயக்குனரான ராம் கோபால் வர்மாவும், பிரபல நடிகர் அக்கினேனி நாகர்ஜுனும் இணைந்து ஒரு மாபெரும் வெற்றி படத்தை கொடுத்தனர்.இந்த படத்தின் மற்றொரு சிறப்பு நாகர்ஜுனுக்கு ஜோடியாக பிரபல நடிகை அமலா நடித்து உள்ளார். இந்த படம் வெளிவந்து 25 ஆண்டுகள் ஆகின்றன. அதனால் இதனை ஒரு மிக பெரிய அளவில் கொண்டாட முடிவு செய்யப்பட்டுள்ளது. அதன் ஒரு பகுதியாக, அந்த படத்தை டிஜிட்டல் முறையில் மாற்றி மீண்டும் ரிலீஸ் செய்ய உள்ளனர். இந்த புதிய டிஜிட்டல் வடிவத்திற்கு 20 டிரைலர்களும் ரெடி ஆகி வருகின்றது. இந்த படத்தின் வெளியீடு சம்பந்தமாக இயக்குனர் ராம் கோபால் வர்மாவும், பிரபல நடிகர் நாகர்ஜுனும் இணைந்து ஒரு பிரஸ் மீட்டுக்கு விரைவில் அழைப்பு விடுக்க இருக்கிறார்கள். அனைத்து ஏற்பாடுகளையும் அன்னபூர்ணா ஸ்டுடியோஸ் நிறுவனம் பெரிய அளவில் செய்து வருகின்றது.அந்த படத்தில் கல்லூரியில் அரசியல் கலந்தால் என்னென்ன விளைவுகளை ஏற்படுத்தும் என்பதனை இயக்குனர் ராம் கோபால் வர்மா அழகாக சொல்லி இருப்பார். புதிய சிவா வரும் மே 15ம் திரைக்கு வருகின்றான்.