'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் | மே 17ல் வருகிறார் சத்யபாமா | பிளாஷ்பேக் : ஜானகியை காத்த ராமன் | 'மார்க் ஆண்டனி' வெற்றியைத் தக்க வைப்பாரா 'ரத்னம்'? | 'விக்ரம், லியோ, கூலி' - டைட்டில் டீசர் வீடியோ, எது பெஸ்ட்? | 10 வருடங்களுக்கு பிறகு ஜூனியர் என்டிஆர் பட இயக்குனர் - ஒளிப்பதிவாளர் பரஸ்பரம் குற்றச்சாட்டு | ஜன கன மன 2 எப்போது? - இயக்குனர் தகவல் | ஆவேசம் படத்துக்கு சமந்தா பாராட்டு | சிறிய படங்களை நசுக்குகிறதா ரீ-ரிலீஸ் படங்கள்? | சைக்கிளில் சென்று ஓட்டு போட்டது ஏன் : விஷால் |
பிரபல நடிகரான நந்தமுரி பாலகிரிஷ்ணாவின் 99வது படத்தில் நடிக்கும் நடிகை யார் என்பது தான் தற்போது டோலியுட்டின் மில்லியன் டாலர் கேள்வி யாகும்.அந்த அளவிற்கு படத்தில் நடிக்கப்போகும் நடிகையை பற்றி பல்வேறு தகவல்கள் வலம் வந்துகொண்டே இருக்கின்றது. இந்த படத்தின் இயக்குனரான ஸ்ரீவாஸ், இன்னும் எந்த நடிகை என்று முடிவு செய்யவில்லை என்று கூறியுள்ளார். இந்த படத்திற்கு இரண்டு கதாநாயகிகள் வேண்டும். அதனால் சில நடிகைகளிடம் இது பற்றி பேசி இருக்கின்றோம். இன்னும் எந்த முடிவும் எடுக்கப்படவில்லை. தற்போது இந்த படத்தின் ப்ரீ புரொடெக்ஷன் வேலை முழு வீச்சில் நடைபெற்று வருகின்றது. வரும் மே மாதத்தில் ஷூட்டிங் ஆரம்பம் ஆகும் என்று இயக்குனர் ஸ்ரீவாஸ் கூறியுள்ளார். எனினும் இந்த படத்தில் முன்னணி நடிகைகளான அஞ்சலியும், ராகுல் ப்ரீத் சிங்கும் நடிப்பார்கள் என்று டோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்நிலையில் தற்போது பாலையா தனது லயன் படத்தை வெளியிடுவதில் மும்முரமாக இறங்கி உள்ளார். அவருடைய 100வது படமான டிக்டேட்டரும் வளர்ந்து வருகின்றது.