ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
சிம்பு தேவன் இயக்கத்தில் தற்போது புலி படத்தில் நடித்து வருகிறார் விஜய். ஏறக்குறைய இறுதிக்கட்டத்துக்கு வந்துவிட்டது புலி படத்தின் படப்பிடிப்பு. ஏற்கனவே வந்த தகவலின்படி புலி படத்தை விஜய்யின் பிறந்த நாள் அன்று வெளியிட திட்டமிட்டுள்ளனர். இந்தப் படத்தை முடித்துவிட்டு சில நாட்கள் வெளிநாட்டு சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார் விஜய். அதன் பிறகு அட்லி இயக்கும் படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொள்ள இருக்கிறார். இன்னும் தலைப்பு வைக்கப்படாததினால் தற்போது விஜய் 59 என்று அந்தப் படத்தை குறிப்பிடுகின்றனர். விஜய் 59 படத்துக்கு ஜி.வி.பிரகாஷ்குமார் இசையமைக்கிறார். ஜி.வி.பிரகாஷ்குமார் இசையில் ஏற்கனவே தலைவா படத்தில் வாங்கண்ணா வணக்கங்கன்னா என்ற பாடலைப்பாடி உள்ளார். சூப்பர்ஹிட்டான அந்தப் பாடலை மனதில் வைத்து விஜய் 59 படத்திலும் விஜய்யைப் பாட வைக்க இருக்கிறார் ஜி.வி.பிரகாஷ்குமார்.