பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
பழம்பெரும் நடிகர் ரவிச்சந்திரனின் மகன் ஹம்சவர்த்தன், மானசீக காதல் படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார். அதன் பிறகு வடுகபட்டி மாப்பிள்ளை, ஜூனியர் சீனியர், நேற்று வரை நீயாரோ நான் யாரோ, புன்னகை தேசம், இனிது இனிது காதல் இனிது, மந்திரன், பிறகு படங்களில் நடித்தார். தந்தையின் மறைவுக்கு பிறகு சினிமாவை விட்டு ஒதுங்கி இருந்த ஹம்சவர்த்தன், தற்போது இயக்குனர் மற்றும் தயாரிப்பாளராகி இருக்கிறார்.
லேசி பாய்ஸ் ஸ்டூடியோ என்ற பெயரில் தயாரிப்பு நிறுவனம் தொடங்கி இருக்கிறார். இந்த நிறுவனத்தின் சார்பில் ஒரு படத்தை இயக்கி, நடிக்கிறார் ஹம்சவர்த்தன். அவருடன் புதுமுங்களும், இன்னொரு முக்கிய நடிகரும் நடிக்கிறார்கள். நடிகர், நடிகைகள் தேர்வு நடந்து வருகிறது.
"அப்பாவின் மரணம் என்னை மிகவும் பாதித்தது. அந்த சோகத்திலிருந்து இப்போதுதான் வெளியில் வந்திருக்கிறேன். அப்பா இயக்கத்தில், நடிக்கும்போது அந்தப் படத்தில் உதவி இயக்குனராக வேலை பார்த்திருக்கிறேன். அந்த அனுபவத்தை கொண்டு இயக்குனராகி இருக்கிறேன்" என்கிறார் ஹம்சவர்த்தன்.