ரூ.100 கோடி வசூலித்த பஹத் பாசிலின் 'ஆவேஷம்' | பிளாஷ்பேக்: படங்களுக்கும் இசை அமைத்த சூலமங்கலம் சகோதரிகள் | நடிகர் சங்க கட்டிட நிதிக்கு 50 லட்சம் வழங்கிய சிவகார்த்திகேயன் | விஷாலின் வரவு செலவு கணக்கு: கோர்ட்டில் தாக்கல் | பிளாஷ்பேக்: இசையிலும் சாதனை படைத்த ராஜ்குமார் | ஹாலிவுட் பட ஆடிசனில் கலந்து கொண்ட பஹத் பாசில் | தெலுங்கு இயக்குனர் சங்கத்திற்கு பிரபாஸ் ரூ.35 லட்சம் நன்கொடை | ‛ஜவான்' பாடலுக்கு நடனமாடிய மோகன்லால் : ஷாருக்கான் நன்றி | இந்த வருடத்திற்கான ஓடிடி கதவுகள் மூடப்பட்டு விட்டன : விஷால் எச்சரிக்கை மணி | ஈரோட்டில் ரசிகர்களை சந்தித்த த்ரிஷா |
தமிழ் திரையில் முன்னணி நடிகராக வளர்ந்து வந்த ஜீவாவிற்கு, யான் போன்ற படம் பெரிய தோல்வி படமாக அமைந்ததால் அவரது மார்கெட் தற்சமயம் குறைய தொடங்கியுள்ளது. தற்போது கவலை வேண்டாம் என்ற படத்தில் நடித்து வரும் ஜீவா, மீண்டும் தனது இடத்தை பிடிக்க தீவிரமாக முயற்சி செய்து வருகின்றார். இதனை அறிந்த அவரது தந்தையும், பிரபல தயாரிப்பாளருமான ஆர்.பி. சௌத்ரி தெலுங்கு திரையில் வெற்றிபெற்ற பட்டாஸ் படத்தை தனது மகனுக்காக ரீமேக் செய்ய முன்வந்துள்ளார். பட்டாஸ் படத்தின் தமிழ் உரிமையை சௌத்ரி, அப்படத்தின் தயாரிப்பாளரும் நாயகனுமான கல்யாண் ராமிடமிருந்து பெரும் தொகை கொடுத்து வாங்கியுள்ளாராம். இப்படத்தின் இயக்குநர், நடிகை உள்ளிட்ட தகவல்கள் விரைவில் வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.