‛ஜவான்' பாடலுக்கு நடனமாடிய மோகன்லால் : ஷாருக்கான் நன்றி | இந்த வருடத்திற்கான ஓடிடி கதவுகள் மூடப்பட்டு விட்டன : விஷால் எச்சரிக்கை மணி | ஈரோட்டில் ரசிகர்களை சந்தித்த த்ரிஷா | வித்யாபாலன் டிவியில் பார்த்த முதல் பாடல், எது தெரியுமா ? | 'கில்லி' எத்தனை மொழிகளில் ரீமேக் ஆனது தெரியுமா ? | குருவாயூரில் நடந்த 'டாடா' நாயகி அபர்ணா தாஸ் திருமணம் | பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா |
பொறியாளன் படத்தை விட பிரபுசாலமன் இயக்கத்தில் நடித்த கயல் படத்தைதான் பெரிய அளவில் எதிர்பார்த்தார் ஆனந்தி. அமலாபாலுக்கு எப்படி மைனா படம் திருப்புமுனையாக அமைந்ததோ அதே அளவுக்கு இந்த படமும் வெற்றி பெற்று தன்னை உச்ச நடிகையாக்கும் என்றுதான் நினைத்தார்.
ஆனால், எதிர்பார்ப்புகளுக்கிடையே வெளியான அப்படம் அந்த அளவுக்கு ஓடவில்லை. இருப்பினும், கயல் ஆனந்தியின் நடிப்பாற்றலை வெளிப்படுத்தும் வித்தியாசமான கதாபாத்திரம் என்பதால் அவர் சோடை போகவில்லை. அதோடு, அந்த படத்தில் அவரது நடிப்பை கேள்விப்பட்டு சண்டிவீரன், த்ரிஷா இல்லேன்னா நயன்தாரா, விசாரணை ஆகிய படங்களுக்கும் புக் பண்ணினர்.