‛கில்லி' ரீ-ரிலீஸ் : த்ரிஷா நெகிழ்ச்சி | சந்தானத்தின் இங்க நான் தான் கிங்கு படம் மே 10 ல் ரிலீஸ் | பைக் டாக்சி ஓட்டுனராக நடிக்கும் நக்ஷா சரண் | எழுத்தாளராக நடிக்கும் வெற்றி | ஈரோடு மகேஷ் இல்லையென்றால் சினிமாவில் நான் இல்லை : தமன்குமார் நெகிழ்ச்சி | அரசியல்வாதிகள் நல்லது செய்தால் நடிகர்கள் அரசியலுக்கு வரமாட்டார்கள் : விஷால் | பிளாஷ்பேக்: நடிகையை திருமணம் செய்த முதல் இயக்குனர் | அன்பே வா சீரியல் நடிகருக்கு திருமணம் | எதிர்நீச்சல் நடிகையின் ஜாலி டூர் கிளிக்ஸ் | நடன பள்ளி தொடங்கிய காயத்ரி - யுவராஜ் |
தெலுங்கு திரையில் முன்னணி நடிகராக விளக்கும் நாகார்ஜுனா, தமிழில் இதயத்தை திருடாதே, ரட்சகன் போன்ற படங்களில் நடித்துள்ளார். தற்போது நடிகர் கார்த்தி நடிக்கும் படத்தில் நாகார்ஜுனா இணைந்து நடித்து வருகிறார். தமிழ் மற்றும் தெலுங்கில் உருவாகும் இப்படத்தில் நடிகை தமன்னா நாயகியாக நடித்து வருகின்றார். இப்பட வேலைகளில் மும்முரமாக இருந்தாலும், நடிகர் நாகார்ஜுனா டி.வி.சேனல் துவங்க தீவீரமாக திட்டம் தீட்டி வருகிறாராம். இந்த சேனலுக்கு மனம் என்று பெயர் வைத்துள்ளனர். பொட்டிலுரி வரப்பிரசாத்துடன் இணைந்து நடிகர் நாகார்ஜூனா இந்த டி.வி.சேனல் நிறுவவுள்ளார். ஏப்ரல் 24 ம் தேதி இந்த சேனலுக்காக அறிமுக விழா ஐதராபாத்தில் நடைபெறுகின்றது. நடிகர் நாகார்ஜூனா ஏற்கனவே மா டி.வியில் ஒரு நிறுவனராக பொறுப்பு வகித்தார். ஆனால் ஸ்டார் குழுமம் அந்நிறுவனத்தின் பெரும் பங்குகளை வாங்கி விட்டதால் நாகார்ஜூனா, இந்த புதிய சேனலை ஆரம்பிப்பதாக டோலிவுட் வட்டாரத்தில் கூறப்படுகின்றது.