தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
பிரபல ஹீரோவான அக்கினேனி நாகர்ஜுன் மீண்டும் மல்டி ஸ்டார் படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டுள்ளார். அவர் ஏற்கனவே பிரபல தமிழ் ஹீரோவான கார்த்தியுடன் ஒரு படத்தில் நடிப்பது நினைவிருக்கலாம்.இது தவிர அவர் மற்றொரு மல்டி ஸ்டார் படத்தில் நடிக்க இருக்கிறார். கன்னடத்தில் பிரபல ஹீரோ புனீத் ராஜ்குமார் மற்றும் மலையாள சிறந்த நடிகரான மோகன்லால் ஆகியோர் இணைந்து நடித்த படம் மெகா ஹிட்டானது. தற்போது அந்த படத்தின் ரீமேக்கில் தான் நாகர்ஜுன் நடிக்க இருக்கிறார் என்று தெரிகிறது. அதாவது புனீத் ராஜ்குமார் நடித்த கதாபாத்திரத்தில் நாகர்ஜுன் நடிக்கிறார். மோகன்லால் கதாபாத்திரத்தில் வேறு ஒரு முன்னணி நடிகர் நடிக்கிறார். இந்த மல்டி ஸ்டார் படங்களில் பிரபல ஹீரோக்கள் நடிக்கும் டிரெண்ட் தற்போது டோலிவுட்டில் நடைமுறையில் உள்ளது. மேலும் பிரபல ஹீரோக்களின் வாரிசு நடிகர்களும் தற்போது ரேசில் இருப்பதால் தான் மூத்த பிரபலங்கள் இந்த டிரெண்டை உருவாக்கி வருவதாகவும் கூறப்படுகின்றது.