ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
நடிகர் தனுசும், இசை அமைப்பாளர் ஜி.வி.பிரகாசும் நெருக்கமான நண்பர்களாக இருந்தார்கள். தனுஷ் நடித்த ஆடுகளம், மயக்கம் என்ன, பொல்லாதவன் படங்களுக்கு இசை அமைத்தார். ஆனால் ஜி.வி.பிரகாஷ்குமார் நடிகரான பிறகு தனுசுக்கும், ஜி.வி.பிரகாஷ்குமாருக்கும் இடையே விரிசல் விழ ஆரம்பித்தது. வெற்றி மாறன் உதவியாளர் மணிகண்டன் இயக்கிய காக்கா முட்டை படத்துக்கு ஜி.வி.பிரகாஷ்குமார்தான் இசை அமைத்தார். அவரை மாற்றச் சொல்லி வற்புறுத்தினாராம் தனுஷ்.
தற்போது வெற்றிமாறன் இயக்கதில் தனுஷ் நடிக்கும் சூதாடி படத்திற்கு ஜி.வி.பிரகாஷை இசை அமைப்பாளராக ஒப்பந்தம் செய்திருந்தார் இயக்குனர் வெற்றிமாறன். ஆனால் தனுஷ் அவரை மாற்றச் சொல்லி வற்புறுத்தினாராம். வெற்றி மாறனும், ஜி.வி.பிரகாசும் நெருங்கிய நண்பர்கள் என்பதால் அவர் தயக்கம் காட்டவே சூழ்நிலையை புரிந்து கொண்ட ஜி.வி.பிரகாஷ்குமார் தானாவே சூதாடி படத்திலிருந்து விலகிக் கொண்டார். அவருக்கு பதிலாக சந்தோஷ் நாராயணன் இசை அமைப்பாளர் என்று தெரிகிறது.