விஜய் கையில் காயம் : ரசிகர்கள் வருத்தம் | ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி |
பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ரா, தயாரிப்பாளராக அறிமுகமாக இருந்த மேடம்ஜி படத்தின் படப்பிடிப்பு, காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மதுர் பண்டார்கர் இயக்கத்தில் உருவாக இருந்த மேடம்ஜி படத்தை, பிரியங்கா சோப்ரா தயாரிப்பது மட்டுமல்லாமல், முன்னணி கேரக்டரில் நடிப்பதாகவும் இருந்தார். அமெரிக்க டிவி நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக, தற்போது அமெரிக்காவில் முகாமிட்டுள்ள பிரியங்கா சோப்ரா, விரைவில் இந்தியா திரும்ப உள்ளார். தாயகம் திரும்பியதும், பிரியங்கா சோப்ரா சஞ்சய் லீலா பன்சாலியின் பஜிராவ் மஸ்தானி படத்திலும், அதன்பின், மிஸ்டர் சலோ மற்றும் கங்காஜல் 2 படங்களிலும் நடிக்க உள்ளார். இதனிடையே, மதுர் பண்டார்கரை, பிரியங்கா சோப்ரா தொடர்பு கொண்டு பேசியுள்ளார். இதன்முடிவில், மேடம்ஜி படத்தின் சூட்டிங்கை, சிறிதுகாலம் நிறுத்திவைப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது, மல்லிகா ஷெராவத் நடித்து சமீபத்தில் வெளியான டர்ட்டி பாலிடிக்ஸ் படத்தின் கதையோடு, மேடம்ஜி படத்தின் கதையும் ஒத்திருப்பதால், மேடம்ஜி படம், கிடப்பில் போடப்பட்டுள்ளதாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.