Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

புலி படத்தில் குத்து டான்ஸ் ஆடுகிறாரா நந்திதா?

13 ஏப், 2015 - 15:20 IST
எழுத்தின் அளவு:
Attakaththi-Nanditas-kuthu-dance-in-Puli-movie

விஜய் நடிக்கும் புலி படத்தின் இறுதிக்கட்ட வேலைகள் தற்போது பரபரப்பாக நடைபெற்று வருகின்றன. சிம்புதேவன் இயக்கத்தில் உருவாகும் இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக ஹன்சிகாவும், ஸ்ருதிஹாசனும் நடிக்கிறார்கள். புலி படத்தில் இரண்டு கதாநாயகிகள் மட்டுமே என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுவிட்டநிலையில், இப்போது இன்னொரு நடிகையும் புலி படத்தில் இணைந்திருக்கிறார். அவர் வேறு யாருமல்ல... அட்டகத்தி நந்திதா தான். புலி படத்தில் என்ன கேரக்டர் என்று கேட்டால் அது பற்றி வாய் திறக்க மறுக்கிறார் நந்திதா. முக்கியமான கேரக்டர் என்று சொல்லித்தான் அவரை புக் பண்ணி இருக்கின்றனர். ஆனால் என்ன கேரக்டர் என் விவரம் நந்திதாவுக்கு சொல்லப்படவில்லை என்று தகவல் அடிபடுகிறது. புலி படத்தில் விஜய் காம்பினேஷனில் நந்திதா நடிக்கும் காட்சிகளுக்கான படப்பிடிப்பு விரைவில் துவங்குமாம்.


சென்னை, கேரளா உள்ளிட்ட இடங்களில் படப்பிடிப்பை முடித்துவிட்டு ஆந்திராவிலுள்ள தலக்கோணம் பகுதியில் புலி டீம் தற்போது முகாமிட்டிருக்கிறது. அதன் அருகில்தான் அண்மையில் 20 தமிழர்கள் சுட்டுக்கொல்லப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது. புலி படத்தில் நந்திதா நடிக்கும் வேடம் பற்றி இரண்டுவிதமாக தகவல்கள் உலவுகின்றன. ஒன்று.. ஒரேயொரு பாடல் காட்சியில் குத்து டான்ஸ் ஆடுகிறார் என்பது. மற்றொரு தகவல்... விஜய்யின் தங்கை வேடத்தில் நடிக்கிறார் என்பது. எது உண்மை என்று விரைவில் தெரிய வரும்..


Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in