ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! | 'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி |
மலையாள இளம் முன்னணி நடிகர்களில் உன்னி முகுந்தன் சற்றே வித்தியாசமானவர். தமிழ் ரசிகர்களுக்கும் இவர் ஓரளவு தெரிந்த முகம் தான். தனுஷ் நடித்த 'சீடன்' படத்தில் ஹீரோவாக நடித்ததும், தற்போது பார்த்திபன் நடிக்க, பேரரசு இயக்கியுள்ள திகார் படத்தின் ஹீரோவாக நடித்திருப்பதும் இந்த உன்னி முகுந்தன் தான். இவரது அசரவைக்கும் உடற்கட்டினாலும், எடையை கூட்டி குறைக்கும் ஜாலவித்தைகளாலும் மலையாள ரசிகர்களிடம் தனிச்சிறப்பு பெற்றவர். ஜிம்முக்கு போகவேண்டியதன் அவசியம் குறித்து இரண்டு வருடங்களுக்கு முன்பு ஒரு வீடியோவே வெளியிடும் அளவுக்கு ஜிம் ரசிகர்.