ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
விஜயசேதுபதியின் கனவு கன்னிகளில் நயன்தாரா குறிப்பிடத்தக்கவர். எப்படி நயன்தாராவுடன் ஒரு படத்திலாவது நடித்து விட வேண்டும் என்று தனி ஒருவன் படத்தில் அதை ஜெயம்ரவி நிறைவேற்றிக் கொண்டாரோ, அதேபோல் இப்போது விஜயசேதுபதியும் நானும் ரவுடிதான் படத்தில் நிறைவேற்றியுள்ளார். அதோடு, நயன்தாரா எப்போது கால்சீட் தருகிறாரோ அப்போது நானும் தருகிறேன் என்று சொல்லி அவர்கள் கேட்ட தேதியை கொடுத்ததோடு, வழக்கத்தை விட அதிக நாட்கள் ஒதுக்கிக்கொடுத்து நயன்தாராவுடன் ரொமான்ஸ் செய்து கொண்டிருக்கிறார். அவர் காட்டும் ஈடுபாட்டைப்பார்த்து அப்படத்தை ரசித்து ரசித்து எடுத்துக்கொண்டிருக்கிறார் விக்னேஷ்சிவன்.
ஆனால், இப்படி நானும் ரவுடிதான் படத்தில் விஜயசேதுபதி முழு ஈடுபாடு காட்டி வருவதால், தற்போது அவர் நடித்துக்கொண்டிருக்கும் சில படங்களின் கால்சீட்டில் துண்டு விழுந்து விட்டதாம். அவர்களுக்கு கொடுத்திருந்த கால்சீட்டையும் இவர் நானும் ரவுடிதான் படத்துக்கு கொடுத்து விட்டதால் அவர்களெல்லாம் இவர் அடுத்தபடியாக எப்போது கால்சீட் தருவார் என்று காத்திருக்கின்றனர்.
ஆக, இதுவரை கால்சீட் கொடுத்தபடி நடித்து வந்த விஜயசேதுபதி, முதன்முறையாக நயன்தாரா விசயத்தில் கொஞ்சம் ஓவர் கரிசனம் காட்டியதால் சில தயாரிப்பாளர்களின் அதிருப்திக்கு ஆளாகியிருப்பதாக கூறுகிறார்கள்.