Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

சம்பளம் தராமல் ஏமாற்றினார்: தயாரிப்பாளர் மீது பாபி சிம்ஹா புகார்

11 ஏப், 2015 - 13:30 IST
எழுத்தின் அளவு:
Bobby-Simha-complaints-against-chennai-ungalai-anbudan-varaverkirathu-director

ஜிகிர்தண்டா படத்தில் நடித்து பாபி சிம்ஹா புகழ் பெறுவதற்கு முன்பு நடித்த படம் சென்னை உங்களை அன்புடன் வரவேற்கிறது. தற்போது இந்த படம் வெளிவந்துள்ளது. இந்த படத்தின் புரமோஷனுக்கு வர பாபி சிம்ஹா வர மறுக்கிறார். திடீர் புகழ் காரணமாக படத்தில் ஷேர் கேட்கிறார். படத்தை குறும்படம் என்று விமர்சிக்கிறார் என படத்தின் இயக்குனரும் தயாரிப்பாளருமான முத்துப்பாண்டியன் புகார் கூறியிருந்தார்.


இந்த நிலையில் சென்னை உங்களை அன்புடன் வரவேற்கிறது படத்தில் நடித்த எனக்கு சம்பளம் தரவில்லை என்று பாபி சிம்ஹா நடிகர் சங்கத்தில் புகார் கூறியுள்ளார்.


அந்த புகார் மனுவில் அவர் கூறியிருப்பதாவது: சென்னை உங்களை அன்புடன் வரவேற்கிறது ஒரு குறும்படம் என்று சொல்லி 2011ம் ஆண்டு என்னை ஒப்பந்தம் செய்தார்கள். வருடத்துக்கு ஒருமுறைதான் படப்பிடிப்பு நடத்தினார்கள். அவர்கள் குறும்படம் என்று சொல்லி சினிமா எடுப்பதை அறிந்து நானும், படத்தின் நாயகியும் அதிர்ச்சி அடைந்தோம். எங்களால் பிரச்னை வந்து விடும் என்று நினைத்து என் அனுமதியின்றி, என் கதாபாத்திரத்திற்கு இன்னொருவரை டப்பிங் பேச வைத்தனர். படத்தின் பாடல் வெளியீட்டு விழா உள்ளிட்ட எந்த புரமோஷன் நிகழ்ச்சிக்கும் என்னை அழைக்கவில்லை எனக்கு சம்பளமும் கொடுக்கவில்லை. சம்பளத்தை கொடுக்காமலேயே படத்தை வெளியிட்டுள்ளனர். இந்த பிரச்னையில் எனக்கு சுமுக தீர்வு கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். என்று அந்த புகார் மனுவில் பாபி சிம்ஹா கூறியுள்ளார்.


இது தொடர்பாக தென்னிந்திய நடிகர் சங்கத் தலைவர் சரத்குமார், தயாரிப்பாளர் சங்கத்துக்கு எழுதியுள்ள கடிதத்தில் "சென்னை உங்களை அன்புடன் வரவேற்கிறது படத்தின் தயாரிப்பாளர் எங்கள் உறுப்பினர் பாபி சிம்ஹாவுக்கு சம்பளம் கொடுக்கவில்லை. வேறொருவரை வைத்து டப்பிங் பேசியுள்ளனர். தேசிய விருது பெற்ற எங்கள் உறுப்பினரின் படத்தையும், பெயரையும் போட்டு வெளியிட முயற்சிக்கிறார்கள் இதன் மீது உரிய நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்" என்று அந்த கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.


Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in