Advertisement

சிறப்புச்செய்திகள்

ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

கதை ரெடி பண்ணும் சித்தார்த்!

11 ஏப், 2015 - 10:13 IST
எழுத்தின் அளவு:
Siddharth-becomes-director

கமல் எப்படி இயக்குனராக வேண்டும் என்று சினிமாவிற்குள் வந்து நடிகரானாரோ அதே மாதிரிதான் சித்தார்த்தும், இயக்குனராக வேண்டும் என்று மணிரத்னத்திடம் உதவியாளராக பணியாற்றி வந்தார். அப்போதுதான் பாய்ஸ் படத்தை இயக்கிய ஷங்கர் அவரை அந்த படத்தின் ஹீரோவாக்கினார்.


அதன்பிறகு தொடர்ந்து படவாய்ப்புகள் வந்ததால் தனது இயக்குனர் ஆசையை ஓரங்கட்டி வைத்து விட்டு முழுநேர நடிகரானார். ஒருகட்டத்தில் தமிழை தள்ளி வைத்து விட்டு தெலுங்கு, இந்தி படங்களில் நடித்து வந்த சித்தார்த், சமீபகாலமாக மீண்டும் தமிழுக்கு வந்து நடித்து வருகிறார்.


அந்த வகையில், காதலில் சொதப்புவது எப்படி என்றொரு படத்தை தயாரித்து நடித்த சித்தார்த்துக்கு வெற்றி கிடைத்தது. அதனால் பின்னர் உதயம் என்எச்4, தீயா வேலை செய்யணும் குமாரு, ஜிகர்தண்டா, காவியத்தலைவன், எனக்குள் ஒருவன் ஆகிய படங்களில் வரிசையாக நடித்தார்.


இதில் அவர் அதிகமாக எதிர்பார்த்த ஜிகர்தண்டா அவருக்கு பேரதிர்ச்சியை கொடுத்தது. மாறாக, தன்னை ஆக்சன் ஹீரோவாக அப்படம் நிறுத்தும் என்று எதிர்பார்த்திருந்த சித்தார்த்துக்கு பதிலாக அப்படத்தின் வில்லனாக பாபி சிம்ஹாவை அப்படம் பேச வைத்தது. அதன்பிறகு காவியத்தலைவன், எனக்குள் ஒருவன் படங்களும் அடுத்தடுத்து தோல்விகளாக அமைந்ததால் பெருங்குழப்பத்தில் இருக்கிறார் சித்தார்த்.


முக்கியமாக, தனக்குள் இருக்கும் இயக்குனரை இந்த சந்தர்ப்பத்தில் வெளிப்படுத்தலாமா? என்று யோசித்து வருகிறாராம். அதனால் ஏற்கனவே சில கதைகளை ரெடி பண்ணி வைத்திருந்த சித்தார்த், இப்போது அந்த கதைகளை இன்றைய பாணியில் சில திருத்தங்கள் செய்து மாற்றிக்கொண்டிருப்பதாகவும் கூறுகிறார்கள். ஆக, எப்போது வேண்டுமானாலும் சித்தார்த்துக்குள் இருக்கிற இயக்குனர் வெளியில் எகிறி குதிக்கலாம் என்று தெரிகிறது.


Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in