டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |
கொம்பன் படத்தில் நடித்து வந்தபோது, ப்ளஸ் -2 பரீட்சைக்காக சீரியசாக படித்து வந்தார் லட்சுமிமேனன். அதனால் அந்த படத்தில் நடிப்பதற்காக ராமநாதபுரத்திற்கு சென்றபோதே புத்தகமும் கையுமாக சென்ற அவர், படப்பிடிப்பை முடித்துக்கொண்டு கேரளாவுக்கு பறந்து விட்டார். அதன்பிறகு சினிமா வாசனையே இல்லாமல் முழுநேர மாணவியாகி படித்து பரீட்சையும் எழுதி முடித்து விட்டார். இந்த நிலையில், கொம்பன் படமும் வெற்றி பெற்றிருப்பதால் ரொம்ப ஹேப்பியாக இருக்கிறார் லட்சுமிமேனன்.
அதோடு, பரீட்சைக்கு படித்துக்கொண்டிருந்தபோது கதை சொல்வதற்காக தன்னை தொடர்பு கொண்டவர்களிடம், இப்ப நான் படிச்சிக்கிட்டிருக்கேன். அதனால் இந்த நேரத்துல நீங்க எங்கிட்ட கதை சொன்னாலும் அது என் மண்டையில் ஏறாது என்று சொல்லி தவிர்த்து வந்த லட்சுமிமேனன், இப்போது அந்த டைரக்டர்களை தொடர்பு கொண்டு, எக்சாம் டென்சன் எல்லாம் முடிஞ்சுப்போச்சு. அதனால் இப்ப நான் ரொம்ப ப்ரீ மைண்டுல இருக்கேன். அதனால் எப்ப கதை சொல்ல கூப்பிட்டாலும் நான் ரெடி, கதை சொல்ல நீங்க ரெடியா இருக்கீங்களா? என்று கேட்டு வருகிறார் லட்சுமிமேனன்.
மேலும், லட்சுமிமேனனின் மார்க்கெட் கொம்பனோடு அவுட்டாகி விட்டது என்று அவரை கண்டுகொள்ளாமல் இருந்த சில வில்லேஜ் பட டைரக்டர்களும் இப்போது கொம்பனின் வெற்றியைத் தொடர்ந்து லட்சுமிமேனனை நாடத் தொடங்கியிருக்கிறார்கள்.