தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
கண்ட நாள் முதல், அழகிய அசுரா, கேடி பில்லா கில்லாடி ரங்கா போன்ற படங்களில் நடித்த ரெஜினா, கடைசியாக ராஜதந்திரம் படத்தில் நடித்தார். அதையடுத்து அவருக்கு தமிழில் படங்கள் இல்லை. ஆனால், தெலுங்கில் சில படங்களை கைவசம் வைத்திருக்கிறார்.
தமிழில் இருந்து தேடிச்சென்ற சில படங்களைகூட அலட்சியம் செய்து திருப்பி அனுப்பி விட்டார். ஏன் என்ன காரணம்? என்று அவரைக்கேட்டால், தமிழில் எந்த படம் வந்தாலும் கவர்ச்சியாக நடிக்க வேண்டும் என்றுதான் கேட்கிறார்கள். அதனால்தான் தவிர்க்கிறேன் என்கிறார் ரெஜினா.
ஆனால் தெலுங்கில் படுகவர்ச்சியாகத்தானே நடிக்கிறீர்கள். தமிழுக்கு மட்டும் ஏன் இந்த ஓரவஞ்சணை? என்று அவரைக்கேட்டால், தெலுங்கில் அப்படி நடித்தாலும் ஒரு பலன் உள்ளது. காரணம், அவர்கள் கூடுதலான சம்பளம் தருகிறார்கள். ஆனால் தமிழில் அப்படியில்லை. அதனால்தான் தமிழ் படங்களில் நடிக்கும் ஆர்வம் குறைந்து, தெலுங்கு படங்களில் நடிக்கும் ஆர்வம் எனக்கு அதிகரித்து வருகிறது என்கிறார் ரெஜினா.