ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
கேரளாவில் போதைப்பொருள் வழக்கில் மலையாள நடிகர் டாம் சாக்கோ கைது செய்யப்பட்டபோது, “இந்த வழக்கில் டாம் சாக்கோ குற்றவாளி என்றாலும் அவர் எனது நண்பர் என்கிற நிலைப்பாட்டை மாற்றிக்கொள்ள மாட்டேன்.. இதனால் அரசியல் ரீதியாகவோ இல்லை வேறு எந்தவகையிலோ என்ன பிரச்சனைகள் வந்தாலும் சந்திக்க தயார்” என சாக்கோவுக்கு ஆதரவாக குரல் கொடுத்தவர் பிரபல இயக்குனர் ஆஷிக் அபு. சொன்னதுபோல இப்போது செயலிலும் அதை காட்டியுள்ளார்.
டாம் சாக்கோ ஜெயிலுக்கு போய்வந்ததாலேயே அவரை ஒப்பந்தம் செய்திருந்த பல நிறுவனங்கள், அவரை எதோ தீண்டத்தகாதவர் போல நினைத்து, தங்கள் படங்களில் இருந்து கழட்டிவிட்டன. ஆனால் ஆஷிக் அபுவோ தற்போது தான் இயக்கவுள்ள 'ராணி பத்மினி' படத்தில் சாக்கோவுக்கு முக்கியமான வேடம் ஒன்றை கொடுத்துள்ளார்.