தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
பாகுபாலி பட கெட்டப்பால், பாலிவுட் படமான ஹாப்பி நியூ இயர் பட வாய்ப்பை தான் இழந்ததாக, ராணா டகுபதி கூறியுள்ளார். 2014ம் ஆண்டின் மிகப்பெரிய ஹிட் படமான ஹாப்பி நியூ இயர் படத்தில், ஷாரூக் கான், சோனு சூட் உள்ளிட்டோர் நடித்திருந்தனர். இந்நிலையில், அப்படத்தின் இயக்குநரான ஃபரா கான், சோனு சூட் கேரக்டரில் நடிக்க முதலில் ராணா டகுபதியை அணுகியிருந்தார். கிளீன் சேவ் தோற்றத்துடன் இருக்க வேண்டும் என்பதே, பரா கானின் விருப்பமாக இருந்தது. ஆனால், பாகுபாலி படத்திற்காக, ராணா டகுபதி, நீண்ட முடியுடனும் மற்றும் தாடியுடனும் காட்சி தந்தார். இதன்காரணமாக, ராணாவால், ஹாப்பி நியூ இயர் படவாய்ப்பு தட்டிப்போனது என்பது குறிப்பிடத்தக்கது.