இலவச மருத்துவமனை கட்டப்போகும் குக் வித் கோமாளி பாலா! | தாய்லாந்தில் பாக்சிங் பயிற்சி பெற்ற மீனாட்சி சவுத்ரி! | நயன்தாராவை பின்னுக்கு தள்ளிய திரிஷா! | மணமகனின் கழுத்தில் தாலி கட்டிய கவுரி கிஷன்! | மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' |
அஜித், விஜய் என தமிழ் திரையின் முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேர்ந்த நடிகை தமன்னாவிற்கு, தமிழில் பட வாய்ப்புகள் குறைய தொடங்கியுள்ளன. தமிழில் நடிகர் ஆர்யாவுடன் ஒரு படத்தில் நடித்து வரும் தமன்னா, தெலுங்கு மற்றும் தமிழில் உருவாகும் கார்த்தி படத்திலும் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். மேலும் தெலுங்கில் நடிகை அனுஷ்கா நடிப்பில் உருவாகி வரும் பாகுபலி படத்தில் நடித்து வரும் தமன்னா, தனக்கும் அனுஷ்காவிற்கும் உண்டான நட்பு குறித்து கூறியுள்ளார். திரைப்படங்களில் தான் நடிக்க ஆரம்பித்த புதிதில் தனக்கு அனுஷ்கா உதவியுள்ளதாக தமன்னா கூறியுள்ளார். மேலும் அதிக அழகும் திறமையும் வாய்ந்த அனுஷ்காவை தான் ஒருபோதும் தனக்கு போட்டியாக நினைத்தது இல்லை என்றும் தமன்னா அனுஷ்காவின் மீதான தனது மரியாதையை வெளிப்படுத்தியுள்ளார்.