டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |
மலையாள சினிமாவில் நுழைந்த இந்த பதினைந்து ஆண்டுகளில் எந்த கேரக்டர் கொடுத்தாலும் அதை மெருகேற்றும் நடிப்பை கொடுக்க கூடியவர் தான் லேனா. டூயட் பாடும் கதாநாயகியாக நடித்தது ஒன்றோ, இரண்டோ படங்களில் தான். அதன்பின் வந்ததெல்லாம் பாசமுள்ள அக்கா, அண்ணி வேடங்கள் தான். இப்போது லேனாவுக்கு இந்தியில் ஏர்லிப்ட் என்கிற படத்தில் அக்சய் குமாருடன் நடிக்கும் வாய்ப்பு கிடைத்ததில் ரொம்பவே சந்தோசம்.
இத்தனை வருடம் பீல்டில் இருந்தாலும் லேனாவுக்கென்று மேனேஜரோ, பி.ஆர்.ஒவோ யாருமே இல்லை. மலையாளத்தை பொறுத்தவரை அவரது பட வாய்ப்புகளை அவர் தான் தேடிக்கண்டுபிடிக்கிறார். தற்போது பாலிவுட் வாய்ப்பு கூட படத்தின் இயக்குனர் ராஜ் மேனன் கேரளாவை சேர்ந்தவர் என்பதாலும் லேனாவின் நடிப்பை பற்றி நன்கு தெரிந்தவர் என்பதாலும் கிடைத்தது தானாம்..
ஆனால் தனக்கு பாலிவுட் வாய்ப்பு தாமதமானதற்கு காரணம், தனக்கென மேனேஜர் இல்லாததால் தான் என்கிறார் லேனா. காரணம் பாலிவுட்டை பொறுத்தவரை கோடிகளில் பணம் புழங்கும் இடம்.. அங்கே எல்லாமே சிஸ்டமேட்டிக் தான். அவர்களுக்கு ஒப்பந்தம் செய்யப்படும் நடிகர் நடிகைகளின் மேனேஜர்கள் தான் படம் முடியும் வரை பொறுப்பு ஏற்கவேண்டுமாம். இப்படி சொல்கிற லேனாவுக்கு அப்படி ஒரு நபர் இதுவரை இல்லாததால், மேனேஜர் இல்லாதது சாதகமா அல்லது பாதகமா என்பது கூட தனக்கு தெரியவில்லை என்கிறார்.