ஜோதிகா, சமந்தா, ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்க தயங்கிய கேரக்டரில் ஆண்ட்ரியா : கோபி நயினார் | ஹீரோயின் ஆன சஞ்சனா சிங் | நட்சத்திர ஓட்டலில் திருமணநாளை கொண்டாடிய அஜித் - ஷாலினி ஜோடி | சிவாஜியின் மகன் சாம்பாஜி வாழ்க்கை சினிமா ஆகிறது | மூத்த நடிகர்களை களமிறக்கும் ஆடுகளம் சீரியல் | டப்பிங் யூனியனில் ரூ.60 ஆயிரம் கட்டினேன் : வருத்தத்தில் ரேவதி பாட்டி | புதுவீட்டில் பிறந்தநாள் கொண்டாடிய ரச்சிதா | 12,000 பேர் பங்கேற்ற ஆடிஷன் : பட்டய கிளப்ப வருது ‛சரி க ம ப' சீசன் 4 | அக்ஷய் குமாருக்கு ஜோடியாக நடித்தால் விமர்சிப்பதா? - மனுசி சில்லார் ஆவேசம் | 'அமரன்' நிஜ கதாநாயகனுக்கு அஞ்சலி செலுத்திய இயக்குனர் |
தமிழ் சினிமா கலைஞர்கள் அதிகம் ஆவலுடன் எதிர்பார்க்கும் விருது திருவிழாவான விஜய் அவார்ட்ஸ் விழா வருகிற 25ந் தேதி நடக்க இருக்கிறது. இதற்காக கே.பாக்யராஜ், கே.வி.ஆனந்த், பால்கி, நடிகை நதியா, யூகி சேது தலைமையிலான நடுவர் குழுவினார் விருதுக்குரிய படங்களை தேர்வு செய்து வருகிறார்கள்.
இதற்கிடையில் சிறந்த கலைஞர்களை தேர்வு செய்ய நேயர்களிடம் இணைய தளம் மூலம் வாக்கெடுப்பும் நடத்தி வருகிறது விஜய் டி.வி. சிறந்த படங்களுக்கான போட்டியில் அரண்மனை, கோலிசோடா, கத்தி, வீரம், வேலையில்லா பட்டதாரி படங்கள் இருக்கிறது. ரசிகர்களுக்கு பிடித்த நடிகர்களுக்கான போட்டியில் ரஜினி (லிங்கா), அஜீத் (வீரம்), விஜய் (கத்தி), தனுஷ் (வேலையில்லா பட்டதாரி), சூர்யா (அஞ்சான்) ஆகியோர் மோதுகிறார்கள்.
ரசிகர்களுக்கு பிடித்த சிறந்த நடிகைகளுக்கான போட்டியில் ஹன்சிகா (மான் கராத்தே), நயன்தாரா (இது கதிர்வேலன் காதல்), சமந்தா (கத்தி), ஸ்ரீதிவ்யா (ஜீவா), ஸ்ருதிஹாசன் (பூஜை) உள்ளனர். சிறந்த இயக்குனர்களுக்கான இறுதிப் பட்டியலில் ஏ.ஆர்.முருகதாஸ் (கத்தி), ஹரி (பூஜை), கே.எஸ்.ரவிகுமார் (லிங்கா), சிவா (வீரம்) சுந்தர்.சி. (அரண்மணை) உள்ளனர்.