ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
சென்டிரல் நிலையம், மெரீனா பீச், அண்ணா, எம்.ஜி.ஆர் சமாதி, மவுண்ட் ரோடு போன்று சென்னையின் அடையாளங்களில் ஒன்று ரிச்சி ஸ்ட்ரீட். தென்னிந்தியாவிலேயே மிகப்பெரிய மின்னணு மார்க்கெட்டாக செயல்படுகிறது. பத்துக்கு பத்தடி கடையில் உலகில் உள்ள அத்தனை பிராண்டுகளின் எலக்ட்ரானிக்ஸ் பொருட்கள் வாங்கலாம். அதன் டியூப்ளிக்கேட்டும் வாங்கலாம். மிகவும் நெருக்கடியான தெருக்கள் நிறைந்த பகுதியாக இருப்பதால் இங்கு எந்த படப்பிடிப்பும் நடப்பதில்லை.
விஜய் நடித்த திருப்பாச்சி படத்தில், அங்காடி தெரு படத்தில் ரங்கநாதன் தெரு கதை களமாக இருந்தது. சூர்யா நடித்த அயன் படத்தில் பர்மா பஜார் கதை களமாக இருந்தது. அதேபோல தற்போது கே.கண்ணன் இயக்கி வரும் போடா ஆண்டனவே என் பக்கம் என்ற படத்தில் ரிச்சி ஸ்ட்ரீட் கதை களமாக வருகிறது. எலெக்ட்ரானிக்ஸ் என்ஜினீயரிங் படித்து விட்டு ரிச்சி ஸ்ட்ரீட்ரில் கடை வைத்திருக்கும் இளைஞராக ஜீவா நடிக்கிறார்.
ரிச்சி ஸ்ட்ரீட்டில் படப்பிடிப்பு நடத்த முடியாது என்பதால் ஆர்ட் டைரக்டர் லால்குடி இளையராஜா பின்னி பில்லில் ரிச்சி ஸ்ட்ரீட்டை பல கோடி செலவில் உருவாக்கி வருகிறார். இங்கு 20 நாட்கள் தொடர்ந்து படப்பிடிப்பு நடக்க இருக்கிறது. படத்தின் ஹீரோயினாக பிசாசு ப்ரயஹா நடிக்கிறார். ப்ரயஹாவின் வீடு ஒரு தியேட்டரை ஒட்டி இருப்பதாக கதையில் வருகிறது. இதற்காக மேற்கு மாம்பலம் சீனிவாச தியேட்டரை ஒட்டி வீடு செட் போடப்பட இருக்கிறது. இங்கு இரண்டாம் கட்ட படப்பிடிப்புகள் நடக்கிறது.