ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
விஷ்ணு- நந்திதா ஜோடி சேர்ந்து நடித்த படம் முண்டாசுப்பட்டி. இந்த படத்தை ராம் இயக்கியிருந்தார். இதில் காமெடியனாக ராமதாஸ் படம் முழுக்க வந்து கலக்கினார். அதனால் வித்தியாசமான காமெடியனை தேடிக்கொண்டிருந்த டைரக்டர்கள் மாறி மாறி அவரை புக் பண்ண இப்போது பிசியான காமெடி நடிகராகி விட்டார் ராமதாஸ்.
அந்த வகையில், அவரது கைவசம் அரை டஜன் படங்கள் உள்ளதாம். அதில் விஜய் மில்டன் இயக்கத்தில், விக்ரம் நடித்து வரும் பத்து எண்றதுக்குள்ள படம் அவருக்கு முக்கியமான படமாக அமைந்துள்ளதாம். காரணம், இந்த படத்தில் விக்ரமுடன் இணைந்து நடித்துள்ள அவர், தொடக்கத்தில் இருந்து கடைசி வரை காமெடி கிச்சு கிச்சு மூட்டுகிறாராம்.
அதோடு, படத்தில் அவர் மட்டுமே ஒரேயொரு காமெடியன் என்பதால் அவருக்கு கூடுதலாகவும் காட்சிகளை கொடுத்துள்ளாராம் டைரக்டர். அதனால் இந்த படம் திரைக்கு வரும்போது கோடம்பாக்கமே என்னை திரும்பிப்பார்க்கும் காமெடியனாகி விடுவேன் என்கிறார் ராமதாஸ்.