'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
ஓநாயும் ஆட்டுக்குட்டியும் படத்தை நடித்து, இயக்கிய மிஷ்கின், அதைத் தொடர்ந்து பாலா தயாரிப்பில் பிசாசு படத்தை இயக்கினார். பின்னர் சில முன்னணி ஹீரோக்களிடம் அவர் கால்சீட் கேட்டு வருவதாக செய்திகள் வெளியாகின. ஆனால் அதன்பிறகு அதுபற்றிய எந்த செய்திகளையும் காணவில்லை. இருப்பினும், மிஷ்கின் இயக்கும் புதிய படத்தில் பணியாற்றுவதற்காக கோடம்பாக்கத்தில் உள்ள இளவட்ட நடிகர் நடிகைகள் மற்றும் டெக்னீஷியன்கள் அவரது அலுவலகத்தை முற்றுகையிட்டு வருகின்றனர். இது நாளுக்கு நாள் அதிகரித்து வந்ததால் செம டென்சனாக காணப்படுகிறாராம் மிஷ்கின்.
இப்படி தான் கதை விவாதத்தில் ஈடுபட்டிருக்கும் நேரத்தில் சான்ஸ் கேட்க வருபவர்கள் படையெடுப்பது பெரிய தொல்லையாக இருப்பதால், இப்போது தனது அலுவலக வாசலிலேயே, மிஷ்கின் இயக்கும் அடுத்த படம் செப்டம்பர் மாதம் தொடங்குகிறது. அதனால் அப்படத்தில் நடிக்க விரும்புபவர்கள் மற்றும் டெக்னீசியன்கள் அனைவரும் அதன்பிறகு அலுவலகத்தை தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன் என்று ஒரு அறிவிப்பை எழுதி ஒட்டியிருக்கிறார் மிஷ்கின்.