மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' | மகள் திருமணத்தில் பிசியான ஷங்கர் | மீண்டும் வெளியாகிறது 'அஞ்சான்' | விடுதலைபுலி இயக்கத்தின் அடுத்தகட்ட தலைவர்கள் பற்றிய படம் | பிளாஷ்பேக்: நம்பியாருக்கு பொருத்தமான ஜோடியாக வலம் வந்த டி.கே.சரஸ்வதி |
விஷ்ணுவர்த்தன் இயக்கத்தில், ஆர்யா அறிமுகமான அதே படத்தில் அறிமுகமானவர் நவ்தீப். அதன் பிறகு தெலுங்கிற்கு சென்று விட்டார். தெலுங்கில் மளமளவென படங்களில் நடித்தவர், அவ்வப்போது தமிழிலும் நடித்தார். இளவட்டம், நெஞ்சில் ஜில் ஜில், ஏகன், அ-ஆஇ-ஈ, சொல்ல சொல்ல இனிக்கும் படங்களில் நடித்தார். எந்த படமும் அவருக்கு பெரிதாக அமையவில்லை. இதனால் தொடர்ந்து தெலுங்கிலேயே நடித்தார். கடைசியாக அவர் நடித்த நொண்டிக்குதிரை படமும் வெளிவரவில்லை.
எப்படியாவது தமிழில் ஜெயிக்க வேண்டும் என்று நேரம் பார்த்திருக்கும் நவ்தீப், தற்போது விக்ரம் பிரபு, கீர்த்தி சுரேஷ் நடிப்பில் ஏ.எல்.விஜய் இயக்கும் இது என்ன மாயம் படத்தில் முக்கியமான கேரக்டரில் நடிக்கிறார். விக்ரம் பிரபு காதலித்த கீர்த்தி சுரேசுக்கு நிச்சயிக்கப்பட்ட மாப்பிள்ளையாக நெகட்டிவ் கேரக்டரில் நடிப்பதாக கூறப்படுகிறது. இந்தப் படம் தனக்கு தமிழில் நல்ல ரீ என்ட்ரியை கொடுக்கும் என்று நம்புகிறார் நவ்தீப்.