இலவச மருத்துவமனை கட்டப்போகும் குக் வித் கோமாளி பாலா! | தாய்லாந்தில் பாக்சிங் பயிற்சி பெற்ற மீனாட்சி சவுத்ரி! | நயன்தாராவை பின்னுக்கு தள்ளிய திரிஷா! | மணமகனின் கழுத்தில் தாலி கட்டிய கவுரி கிஷன்! | மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' |
மலையாள நடிகை காவ்யா மாதவனுக்கு கொஞ்சம் கட்டையான குரல் என்பதால் அவரது படங்களில் பெரும்பாலும் அவருக்கும் டப்பிங் குரல் தான் கொடுக்கப்பட்டது. ஆனால் இரண்டு வருடங்களுக்கு முன் மம்முட்டியுடன் 'வெனிசில் வியாபாரி' படத்தில் காவ்யா மாதவன் நடித்தபோது, அவரையே டப்பிங் பேசச்சொல்லி ஊக்கம் கொடுத்தார் மம்முட்டி. அப்போதிருந்து சொந்தக்குரலில் தான் டப்பிங் பேசுகிறார் காவ்யா மாதவன். தற்போது அவர் நடித்து முடித்துள்ள 'ஷி டாக்ஸி' படத்திற்காக டப்பிங் பேசி வருகிறார்.
இப்போது பிரச்சனை என்வென்றால் அவர் நடித்து வரும் இன்னொரு படமான 'ஆகாசவாணி'க்கும் தானே சொந்தக்குரலில் டப்பிங் பேசுவேன் என பிடிவாதம் பிடிக்கிறார். ஆனால் படத்தின் இயக்குனரோ வேறு ஒரு டப்பிங் ஆர்ட்டிஸ்டை வைத்து பேசவைக்க முடிவு செய்துள்ளார். இதனால் கோபமான காவ்யா, அந்த இயக்குனரை பழிவாங்கும் நோக்கத்தில் இன்னும் முடிக்கவேண்டிய சில காட்சிகளை முடித்து தராமல் இழுத்தடிக்கிறாராம்.