தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
நந்தா படத்தில் லொடுக்கு பாண்டியாக அறிமுகமானவர் கருணாஸ். பல படங்களில் காமெடி வேடங்களில் நடித்து வந்த அவர், திடீரென்று அம்பாசமுத்திரம் அம்பானி, ரகளபுரம், சந்தமாமா உள்பட சில படங்களில் ஹீரோ அரிதாரம் பூசினார். அதோடு, நல்ல கதைகளாக கிடைத்தால் ஒரே நேரத்தில் பத்து படங்களில்கூட நான் ஹீரோவாக நடிக்கவும் தயாராக இருக்கிறேன் என்றும் அந்த நேரத்தில் தில்லாக பேசி வந்தார்.
ஆனால், அப்படி அதிக நம்பிக்கையுடன் கருணாஸ் நடித்து வந்தபோதும் படங்களின் தோல்வி அவரது நம்பிக்கையை தகர்த்து விட்டன. அதனால் மறுபடியும் காமெடி அரிதாரம் பூசியுள்ளார் அவர். அந்த வகையில், டார்லிங், கொம்பன் படங்கள் காமெடியனாக மறுபிரவேசம் செய்துள்ள கருணாஸ், தற்போது மேலும் பல படங்களில் காமெடியனாக நடித்து வருகிறார்.