Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

நட்பு வேறு- தொழில் வேறு! -சொல்கிறார் சந்தானம்

08 ஏப், 2015 - 10:32 IST
எழுத்தின் அளவு:
Santhanam-differenciates-Job-and-relationship

வளரும்போது தாங்கள் வளருவதற்கு காரணமானவர்கள் மீது நன்றியுணர்வுடன் இருப்பவர்கள், வளர்ந்த பிறகு வளர்த்து விட்டவர்களை படிப்படியாக மறந்து விடுவார்கள். அல்லது மறக்க முயற்சிப்பார்கள். அதன்காரணமாக அதன்பிறகு அவர்களுடன் நடிப்பதையே தவிர்ப்பார்கள்.


இதில் சந்தானம் எந்த ரகமோ தெரியவில்லை. ஆனால், அவரை வைத்து ஆரம்ப காலத்தில் படம் பண்ணியவர்கள், இப்போது அவர் தங்களை கண்டுகொள்வதே இல்லை என்று ஆதங்கப்படுகிறார்கள். எங்கள் படத்தில் நடித்தால் சம்பளத்தை குறைத்து விடுவோம் என்பதற்காகத்தான் அவர் வெவ்வேறு காரணங்களை சொல்லி நடிக்க மறுத்து விடுகிறார் என்கிறார்கள்.


ஆனால் இதுபற்றி சந்தானம் தரப்பில் கூறும்போது, சினிமாவில் என்னை வளர்த்து விட்டவர்களை நான் ஒருபோதும் மறப்பதில்லை. மதிக்கவும் தவறியதில்லை. அதேசமயம், இப்போது வளர்ந்த நடிகனாகி விட்டதால் எனது பெயரை தக்க வைத்துக்கொள்ள வேண்டிய கட்டாயத்திலும் இருக்கிறேன். அதனால்தான் சில நண்பர்களின் படங்களில் எனக்கான கேரக்டர்கள் பிடிக்காத பட்சத்தில் அதை நேரடியாக அவர்களிடம் சொல்ல முடியாமல், நாசூக்காக அவர்களின் படங்களில் நடிப்பதை தவிர்க்கிறேன். இது அவர்களைப் பொறுத்தவரை என் மீது தவறான எண்ணம் ஏற்படலாம். ஆனால் என்னைப்பொறுத்தவரை ஒரு நடிகனாய் அதுதான் சரி. ஒரு கலைஞனாய் எனக்கான வேடம் எனக்கு திருப்திதரக்கூடியதாக இருக்கும்பட்சத்தில்தான் அதில் நடிக்க வேண்டும். இல்லையேல் மறுத்து விட வேண்டும். அதைத்தான் நான் செய்து வருகிறேன். அதனால், இப்போது நான் நட்பு, தொழில் இரண்டையும் கலப்பதே இல்லை. நண்பர்கள் என்றுமே நண்பர்களாக இருக்கட்டும். தொழில் என்றுமே தொழிலாக இருக்கட்டும். இரண்டையும் கலக்காமல் அதை சரியாக, நியாயமாக செய்து கொண்டிருப்பதையே விரும்புகிறேன் என்று கூறுகிறார் சந்தானம்.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in