இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய திரைப்பிரபலங்கள்...! | 'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு |
சமூக வலைத்தளங்களான ஃபேஸ்புக், டிவிட்டர் ஆகியவற்றில் ஒரு சில தமிழ் நட்சத்திரங்களும், மற்ற கலைஞர்களும்தான் ஆக்டிவ்வாக இருக்கிறார்கள். ரஜினிகாந்த் போன்றவர்கள் டிவிட்டர் கணக்கை ஆரம்பித்திருந்தாலும் எப்போதோ ஒரு முறைதான் அதில் ஏதாவது ஒரு பதிவைப் போடுகிறார்கள். தனுஷ், சிம்பு, சிவகார்த்திகேயன், வெங்கட் பிரபு, விக்ரம் பிரபு, ஜி.வி.பிரகாஷ்குமார், ஹாரிஸ் ஜெயராஜ், சமந்தா, த்ரிஷா, ஹன்சிகா, புதிதாக வந்தவர்களில் சூர்யா இப்படி ஒரு சிலர்தான் தொடர்ச்சியாக ஏதாவது தகவலைப் பற்றி பதிவிட்டு வருகிறார்கள்.
இசையமைப்பாளரான யுவன் ஷங்கர் ராஜாவும் ஒரு காலத்தில் டிவிட்டரில் தொடர்ச்சியாக பல பதிவுகளைப் போட்டு வந்து கொண்டிருந்தார். ஆனால், கடந்த வருடம் அவர் முஸ்லிம் மதத்திற்கு மாறியதையடுத்து பல கடுமையான கருத்துக்களை அவரது டிவிட்டர் கணக்கில் ரசிகர்கள் பதிவிட்டனர். அதையடுத்து தன்னுடைய கணக்கையே யுவன்ஷங்கர் ராஜா 'டெலிட்' செய்து விட்டார். இது குறித்து சமீபத்தில் அவரிடம் கேட்ட போது கூட, இசையைமக்கும் வேலைகளுக்கு இடையில் ஏதாவது நம்மைப் பற்றிய ஒரு கருத்தை டிவிட்டரில் படிக்கும் போது அது மிகவும் பாதித்து விடுகிறது. அதனால்தான் டிவிட்டரில் இருந்து விலகினேன் என்றார்.
தற்போது 'thisisysr' என்ற பெயரில் யுவன் ஷங்கர் ராஜா புதிய கணக்கு ஒன்றை ஆரம்பித்து மீண்டும் டிவிட்டரில் இணைந்துள்ளார். இதைப் பற்றிய தகவலை வெங்கட் பிரபுதான் வெளியிட்டுள்ளார். ஆனால், யுவன் இதுவரை அதில் எந்த ஒரு பதிவையும் போடவில்லை. வெங்கட் பிரபு 'மாஸ்' படம் பற்றி குறிப்பிட்டு, யுவனை டிவிட்டருக்கு மீண்டும் வெல்கம் செய்த பதிவை மட்டும் ரிட்வீட் செய்துள்ளார். ஆனால், அதற்குள் யுவனின் இந்த புதிய டிவிட்டர் கணக்கை 6000க்கும் மேற்பட்டோர் தொடர ஆரம்பித்துள்ளனர். நேற்று யுவனின் புதிய டிவிட்டர் கணக்கு சென்னை டிரெண்டிங்கில் இடம் பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.