Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

இரு விதமான வெற்றி... ஜி.வி.பிரகாஷ் மகிழ்ச்சி...!

07 ஏப், 2015 - 13:58 IST
எழுத்தின் அளவு:
Double-success---G.V.Prakash-happy

2015ம் ஆண்டின் துவக்கத்திலேயே பொங்கலுக்கு வெளிவந்த படங்களில் நல்ல லாபத்தைக் கொடுத்த படமாக 'டார்லிங்' படம் விளங்கியது. அந்தப் படத்தில் இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ்குமார் நாயகனாக அறிமுகமானார். அந்தப் படத்துடன் வெளிவந்த 'ஐ, ஆம்பள' ஆகிய படங்களுடன் போட்டி போட்டாலும் படத்தை வாங்கிய அனைவருக்குமே 'டார்லிங்' படம் லாபத்தைத் தந்ததாக திரையுலக வட்டாரங்களில் தெரிவிக்கிறார்கள். ஒரு அறிமுக நடிகராக அந்தப் படத்தில் ஜி.வி.பிரகாஷ் வெற்றி பெற்றார்.


இப்போது 'கொம்பன்' படத்தின் மூலம் இசையமைப்பாளராகவும் அதிகம் பேசப்பட்டு வருகிறார். இந்தப் படத்தில் இடம் பெற்றுள்ள 'கருப்பு நிறத்தழகி..., கம்பி கரை வேட்டி...' ஆகிய பாடல்களும், படத்தின் பின்னணி இசையும் ஜிவிக்கு அதிகமான பாராட்டுக்கள் பெற்றுத் தந்துள்ளன.


இது குறித்து இன்று காலை நடந்த 'கொம்பன்' சக்சஸ் மீட்டில் ஜிவி பேசியதாவது,


“டார்லிங் படமாகட்டும், கொம்பன் படமாகட்டும் இந்த வருஷத்தை எனக்கு பாசிட்டிவ்வா அமைச்சிக் கொடுத்திருக்கு. 'ஆடுகளம்' படத்துக்கப்புறமா ஒரு கிராமிய மணம் வீசுற படம் எனக்கு அமையல. இயக்குனர் முத்தையா இந்தப் படத்துக்கு நான் இசையமைக்கணும்னு கேட்டுக்கிட்டாரு. முதல்ல இந்தப் படத்துக்காக நான் ஒரு பாடல் மட்டும்தான் பண்றதா இருந்தது. அப்புறம் படத்தோட அனைத்துப் பாடல்கள், பின்னணி இசையையும் நானே பண்ணினேன்.


மீடியாக்களுக்கு நன்றி சொல்லணும். பொதுவா நான் ஒரு படம் ரீலீசான யாருக்கும் போன் பண்ணி, கேக்க மாட்டேன். ஒரு படம் நல்லா இருந்தால் மத்தவங்களே போன் பண்ணி சொல்வாங்கன்கற நம்பிக்கை எனக்கு. டார்லிங் படத்துக்கும், இப்ப கொம்பன் படத்துக்கும் எனக்கு நிறைய பேர் போன் பண்ணி பாராட்டினாங்க. இப்படி ஒரு வெற்றிப் படத்துல நானும் இருக்கிறதுக்குக் காரணமான 'கொம்பன்' குழுவினருக்கு என் நன்றி என ஜிவி பேசினார்.


Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in